மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

வேறு வழியில்லை: சிவகார்த்திகேயன்

வேறு வழியில்லை: சிவகார்த்திகேயன்

ஓடிடி எனும் டிஜிட்டல் தளத்தில் திரைப்படங்களை நேரடியாக வெளியிடுவது அதிகமாகிவருகிறது. கொரோனா அச்சுறுத்தலால் திரையரங்குகளில் படத்தை வெளியிடுவதே பெரும் சவாலாகிவிட்டது. திரையரங்கங்களுக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் பல சின்ன பட்ஜெட் படங்கள் ஓடிடியில் வெளியாகிவருகிறது. சின்ன பட்ஜெட் படங்களுக்கு நடுவே பெரிய பட்ஜெட் படமொன்று ஓடிடிக்கு வந்ததென்றால் அது சூர்யாவின் சூரரைப் போற்று படம் தான்.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா முரளி நடிப்பில் வெளியான இந்தப் படத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில், மீண்டும் ஒரு பெரிய பட்ஜெட் படம் திரையரங்க ரிலீஸை தவிர்த்துவிட்டு, ஓடிடிக்கு வருகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் டாக்டர். சிவகார்த்திகேயனுடன் இணைந்து கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்துவருகிறது. சிவகார்த்திகேயனுடன் ப்ரியங்கா மோகன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு இசை அனிருத்.

இப்படத்தை கடந்த மார்ச் 26ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டிருந்தது. ஆனால், தேர்தல் பரபரப்பு காரணமாக படம் வெளியாகமுடியவில்லை. அதனால், படத்தை ரம்ஜான் ஸ்பெஷலாக மே 13ஆம் தேதி வெளியிட முடிவெடுத்திருந்தார்கள். இந்நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக திரையரங்குகள் 50% இருக்கையுடன் மட்டுமே அனுமதிக்க அரசு கட்டுப் பாடுகள் விதித்துள்ளது. அதோடு, இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு காரணமாக படங்கள் வெளியாவதில் சிக்கல் நிலவுகிறது.

இப்படியான சூழலில், திரையரங்க ரிலீஸை தவிர்த்துவிட்டு நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்கிறது டாக்டர். அதற்கான இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. கூடுதல் தகவலாக, பிரைம் வீடியோவிற்கு இந்தப் படத்தை விற்பனை செய்ய இருக்கிறர்களாம். நெட் ஃப்ளிக்ஸ் & பிரைம் வீடியோ என இரண்டு டிஜிட்டல் தளத்திலும் பேச்சுவார்த்தை கடந்த சில தினங்களாக நடந்திருக்கிறது. இறுதியாக, பிரைம் வீடியோ 43 கோடி ரூபாய்க்கு டாக்டர் படத்தை விலை பேசி இறுதி செய்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

கொரோனா அச்சுறுத்ததால் சூர்யாவின் சூரரைப் போற்று வேறு வழியில்லாமல் ஓடிடிக்குச் சென்றது. அதுபோல, திரையரங்கில் வெளியிட ஆசைப்பட்ட டாக்டர் படமும் இப்போது ஓடிடிக்கு செல்கிறது

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வியாழன் 22 ஏப் 2021