மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 22 ஏப் 2021

தெலுங்கு முன்னணி நடிகருடன் இணையும் விஜய்?

தெலுங்கு முன்னணி நடிகருடன் இணையும் விஜய்?

தெலுங்கு முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடிகர் விஜய் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து, நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகி வரும் 'தளபதி 65' படப்பிடிப்பில் பிஸியாகிவிட்டார் விஜய். சில தினங்கள் முன்பு, தளபதி 65 படத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் ஒரு பேச்சு அடிப்பட்டது. ஆனால் இந்தத் தகவல் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதற்கிடையில் மாஸ்டர் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

தற்போது விஜய் தனது அடுத்த படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் உடன் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் இதே போன்று ஒரு தகவல் வெளியாகி இரு தரப்பு ரசிகர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது நினைவிருக்கலாம்.

தென்னிந்திய சினிமாவில் இரண்டு முக்கிய நாயகர்கள் இணையும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. இந்தப் படத்தை அட்லீ இயக்கப் போவதாக மற்றொரு தகவலும் வெளியாகியுள்ளது. ஒருவேளை இந்த தகவல்கள் உண்மையாக இருப்பின் விஜய் - அட்லீ கூட்டணியில் நான்காவது படமாக இது இருக்கும். தெறி, மெர்சல், பிகில் ஆகிய தொடர்ச்சியான மூன்று ஹிட் படங்களைக் கொடுத்த இந்தக் கூட்டணி தெலுங்கு முன்னணி நடிகருடன் இணைந்தால் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்!

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வியாழன் 22 ஏப் 2021