மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி-களில் சுல்தான் வெளியாக காரணம் !

ஒரே நேரத்தில் இரண்டு ஓடிடி-களில் சுல்தான் வெளியாக காரணம் !

ஒரு படம் திரையரங்கில் வெளியாகி குறிப்பிட்ட நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியாகும். முன்பெல்லாம் குறைந்தது மூன்று மாதமாவது திரையரங்கில் ஓடியப் பிறகே ஓடிடிக்கு வரும். இப்போதெல்லாம், இரண்டு வாரம், ஒரு மாதம் ஓடினாலே ஓடிடிக்கு வந்துவிடுகிறது.

சமீபத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் போதே பிரைம் வீடியோ ஓடிடிக்கு வந்தது. அப்படி, சுல்தான் படமும் திரையரங்கில் ஓடிக் கொண்டிருக்கும் போதே ஓடிடிக்கு வர இருக்கிறது.

நடிகர் கார்த்தி ஹீரோவாக நடித்து கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியான படம் சுல்தான். சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். கார்த்திக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். இவர் தமிழில் அறிமுகமாகும் படம் இது. விவேக் - மெர்வின் இந்தப் படத்துக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர். ப்ரத்யேகமாக பின்னணி இசைக்கு யுவன் ஷங்கர்ராஜா இசையமைத்திருக்கிறார்.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் வெளியாகி படம் நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. இந்தப் படம் வெளியான முதல் ஐந்து நாளில் தமிழ்நாட்டில் 19 கோடியும் கேரளாவில் 1.50 கோடியும், ஆந்திராவில் 5 கோடியும் வசூலித்ததாக சொல்லப்படுகிறது.

திரையரங்கில் நல்லபடியாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படத்தை தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு ஓடிடியில் வெளியிடும் வேலைகளில் இறங்கியிருக்கிறார். ஆனால், இரண்டு டிஜிட்டல் தளங்களில் ஒரே நாளில் வெளியாக இருக்கிறது.

சுல்தான் தமிழ் வெர்ஷனானது டிஸ்னி ஹாட்ஸ்டாரிலும், தெலுங்கு டப் சுல்தான் படமானது ‘அஹா’ ஓடிடியிலும் மே 2ஆம் தேதி வெளியாக இருப்பதாக ஒரு தகவல். கார்த்திக்கு தெலுங்கில் நல்ல மார்கெட் உண்டு. அதோடு, தெலுங்கு சென்சேஷனல் ராஷ்மிகாவும் நடித்திருப்பதால் தெலுங்கின் சிறப்பு மிக்க Aha ஓடிடியிலும் வெளியிடுகிறார்களாம்.

- ஆதினி

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

புதன் 21 ஏப் 2021