மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

அனிருத்தின் அடுத்தப் பாய்ச்சல்.

அனிருத்தின் அடுத்தப் பாய்ச்சல்.

தமிழ் சினிமாவில் இளம் இசையமைப்பாளர்களில் ஒருவர் அனிருத். தமிழின் உச்ச நடிகர்களின் படங்களெல்லாம் இவர் கைவசம் தான். இந்த வருடம் விஜய் நடிப்பில் மாஸ்டர் படம் இவர் இசையில் வெளியானது. அடுத்து, சிவகார்த்திகேயனின் டாக்டர் & டான், விஜய்சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், கமல்ஹாசனின் விக்ரம், தனுஷின் 44வதுபடம், விஜய் 65 மற்றும் இந்தியன் 2 படங்கள் இவர் இசையில் வெளியாக இருக்கிறது.

தமிழில் எக்கச்சக்கப் படங்கள் வைத்திருக்கும் அனிருத், அடுத்த கட்டமாக பாலிவுட்டில் இசையமைக்க இருக்கிறார். தனுஷ் நடித்து பாலிவுட்டில் வெளியான ராஞ்சனா மற்றும் வெளியாக தயாராக இருக்கும் அட்ராங்கி ரே படங்களின் இயக்குநர் ஆனந்த் எல்.ராய். பிரபல இயக்குநரான இவரின் அடுத்தப் படத்தில் அனிருத் இசையமைக்க இருக்கிறாராம். பொதுவாக, ஆனந்த் எல்.ராய் படங்களுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பார். இந்தமுறை அனிருத்தினை டிக் செய்திருக்கிறார்.

‘கொலவெறி டி’ எனும் ஒற்றைப் பாடலின் மூலம் உலகமறியும் இசையமைப்பாளராக மாறியவர் அனிருத். ஏற்கெனவே, பிஜாய் நம்பியார் இயக்கத்தில் டேவிட் படத்தின் மூலம் பாலிவுட்டில் இசையமைப்பாளராக அறிமுகமானார். ஆனால், அந்தப் படத்தில் ஆறு இசையமைப்பாளர்கள் இணைந்து பணியாற்றியிருப்பார்கள். சொல்லப் போனால், ஒரு படம் முழுமையாக இந்தியில் இசையமைக்கப் போவது இதுதான் முதல்முறை.

பொதுவாக, ஆனந்த் எல்.ராய் படங்களில் இசைக்கு முக்கியத்துவம் இருக்கும். ராஞ்சனா, தனு வெட்ஸ் மனு, ஜீரோ படங்களை உதாரணமாகச் சொல்லலாம். அதனால், அனிருத் இசையமைக்க இருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்பொழுது, ஆனந்த் எல்ராய் இயக்கத்தில் தனுஷ், அக்‌ஷய்குமார், சாரா அலிகான் நடிப்பில் அட்ராங்கி ரே வெளியாக இருக்கிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். இப்படத்தைத் தொடர்ந்து, சொந்த தயாரிப்பில் ரக்‌ஷா பந்தன் எனும் படத்தை இயக்க இருக்கிறார். இப்படத்தில் அக்‌ஷய்குமார் நடிக்க இருக்கிறார். செஸ் சாம்பியன் விஸ்வநாதன் பயோபிக் படமிது. இப்படத்தில் அனிருத் இசையமைக்க இருக்கிறாரா அல்லது இதற்கு அடுத்தப் படமா என்பது இன்னும் உறுதியாக தெரியவில்லை.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

4 நிமிட வாசிப்பு

மாறனின் படத்தைப் புகழ்ந்து தள்ளிய இயக்குநர்கள்!

சொந்தப்பட புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

13 நிமிட வாசிப்பு

சொந்தப்பட  புரொமோஷனுக்கு மட்டும் போலாமா?: கே.ராஜன்

புதன் 21 ஏப் 2021