மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

கமல் தரப்பிலிருந்து விஜய்சேதுபதிக்கு வந்த சர்ப்ரைஸ் போன் கால் !

கமல் தரப்பிலிருந்து விஜய்சேதுபதிக்கு வந்த சர்ப்ரைஸ் போன் கால் !

தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர் விஜய்சேதுபதி. ஒன்றல்ல இரண்டல்ல அடுக்கடுக்காகப் படங்களை கையில் வைத்திருக்கிறார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிப் படங்களிலும் நடித்துவருகிறார்.

நடிகராக மட்டுமே நடிப்பேன் என்றில்லாமல் கெஸ்ட் ரோல் என்றாலும் சரி, வில்லனாக நடிக்க வேண்டுமென்றாலும் சரி கதைப் பிடித்தால் நடித்துக் கொடுப்பது விஜய்சேதுபதியின் இயல்பாகிவிட்டது. இப்படியான சூழலில் விஜய்சேதுபதிக்கு ஒரு சர்ப்ரைஸ் போன் கால் சமீபத்தில் வந்திருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் நிறுவனத்திடமிருந்து தான் அந்த அழைப்பு வந்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்க இருக்கும் விக்ரம் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க முடியுமா என்று கேட்டு தான் விஜய்சேதுபதியை அழைத்திருக்கிறார்கள். சமீபத்தில் கூட, பாலிவுட்டில் ஒரு நேர்காணலில் இந்த தகவலையும் விஜய்சேதுபதி உறுதி செய்தார்.

விக்ரம் படத்தில் நடிக்க கேட்டு அழைப்பு வந்தது. அடுத்தடுத்துப் படங்கள் கமிட் செய்துவைத்திருப்பதால் இன்னும் எதுவும் உறுதியாகவில்லை என்று ஏற்கெனவே விஜய்சேதுபதி கூறியிருந்தார்.

கமல் மாதிரியான ஒரு பெரிய நடிகரின் படத்தில் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்துவிடக் கூடாது என நினைக்கிறாராம் சேதுபதி. அதனால், மற்றப் படங்களின் தேதியை மாற்ற முடியுமா என திட்டமிட்டுவருவதாகவும் தகவல். ஏற்கெனவே, லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டரில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தார் விஜய்சேதுபதி. மாஸ்டரில் விஜய்யை விட விஜய்சேதுபதிக்கு பாராட்டுகள் அதிகமாக குவிந்தது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ரஜினிக்கு பேட்ட படத்தில் வில்லனாக நடித்துவிட்டார். விஜய்க்கும் மாஸ்டரில் வில்லனாகி விட்டார். அடுத்து கமலுக்கும் விக்ரம் படத்தில் வில்லனாகி விட்டால், மீதமிருப்பது அஜித் மட்டும் தான். அதுவும் விரைவில் நடந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

லோகேஷ் இயக்கும் விக்ரம் படத்தில் கமலுக்கு வில்லனாக மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் நடிக்கிறார். ஆக, விஜய்சேதுபதியை வேறு ஒரு முக்கிய ரோலில் நடிக்க கேட்டிருப்பதாக தகவல். விரைவிலேயே இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

- தீரன்

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

5 நிமிட வாசிப்பு

அனபெல் சேதுபதி: இயக்குநர் தீபக் விளக்கம்!

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக உத்தரவு!

2 நிமிட வாசிப்பு

கங்கனா ரணாவத் நேரில் ஆஜராக  உத்தரவு!

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

2 நிமிட வாசிப்பு

ரசிகர்களைக் கண்டித்த ரஜினி ரசிகர் மன்றம்!

புதன் 21 ஏப் 2021