மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

ஷங்கர் - ராம்சரண் படத்தில் நாயகி இவரா?

ஷங்கர் - ராம்சரண் படத்தில் நாயகி இவரா?

பிரமாண்டமாகவே படத்தை எடுப்பதால் ஒரு படத்தை முடித்துவிட்டே அடுத்த படத்தைத் தொடங்குபவர் இயக்குநர் ஷங்கர். இப்போது, அடுத்தடுத்து மூன்று படங்களை கமிட் செய்துவைத்திருக்கிறார்.

ஒன்று, ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் இந்தியன் 2. லைகா நிறுவனம் தயாரித்துவரும் இந்தப் படத்தின் முக்கால்பாக படப்பிடிப்பு முடிந்துவிட்டது. படப்பிடிப்பு முடிவதில் நீண்ட தாமதம் ஏற்பட்டதால், 'இந்தியன் 2'வை அப்படியே விட்டுவிட்டு அடுத்த படம் ஒப்பந்தமானார்.

அப்படி, இரண்டாவது ராம்சரண் ஹீரோவாக நடிக்க ஷங்கர் இயக்கும் படமானது ஒப்பந்தமானது. தொடர்ந்து, மூன்றாவதாக, விக்ரம் நடித்து வெளியான அந்நியன் படத்தை இந்தியில் ரீமேக் செய்ய ஒப்பந்தமானார். ரன்வீர் சிங் நடிக்க இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது.

இதில், இந்தியன் 2 படத்தை முதலில் முடித்துக்கொடுக்க சொல்லி லைகா நிறுவனமும், அந்நியன் படத்தின் ரீமேக் உரிமை தயாரிப்பாளருக்கே சொந்தம் என ஆஸ்கர் ரவிச்சந்திரனும் இரண்டு பக்கத்திலிருந்தும் ஷங்கரை அழுத்தம் கொடுத்துவருகிறார்கள்.

இப்படியான சூழலிலும் ராம்சரண் நடிக்கும் படத்துக்கானப் பணிகள் ஒருபக்கம் போய்க் கொண்டு தான் இருக்கிறது. ராம்சரணின் 15ஆவது படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க ராஷ்மிகா மந்தனாவிடம் பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதுவும் ஜார்னலிஸ்ட் ரோலில் நடிக்க இருக்கிறாராம். அதோடு, இந்தப் படத்தில் முக்கிய ரோலில் நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடந்துவருவதாகவும் தகவல்.

ரஜினியுடன் பேட்ட, விஜய்யுடன் மாஸ்டர் படங்களில் வில்லனாக கெத்து காட்டினார் சேதுபதி. ஷங்கர் படத்தில் விஜய் சேதுபதி இணைந்தால் படத்தில் எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாகும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை.

3டி தொழில் நுட்பத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் இந்தப் படம் உருவாக இருக்கிறது. எப்படியும் இந்த வருடம் படப்பிடிப்பு தொடங்கி, அடுத்த வருடம் பட ரிலீஸை எதிர்ப்பார்க்கலாம்.

-ஆதினி

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

புதன் 21 ஏப் 2021