மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 21 ஏப் 2021

‘Spider-Man: Into The Spider-Verse 2’ ரிலீஸ் குறித்த புது அப்டேட்!

‘Spider-Man: Into The Spider-Verse 2’  ரிலீஸ் குறித்த புது அப்டேட்!

ஸ்பைடர்மேன் திரைப்படங்களில் ரசிகர்களுக்கு புது அனுபவமாக அமைந்த படமென்றால் அது Spider-Man: Into The Spider-Verse. இந்தப் படத்தின் அடுத்தப் பாகம் குறித்த புது தகவல் கிடைத்துள்ளது.

இப்படியும் ஸ்பைடர் மேன் படம் எடுக்கலாமா என ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்திய படம் இது. கதை இதுதான். வெவ்வெறு பிரபஞ்சங்களின் கேட்டை ஓபன் செய்ய நினைக்கும் வில்லன், அதை முறியடித்து உலகைக் காப்பாற்றும் எக்கச்சக்க ஸ்பைடர் மேன் / ஸ்டைபர் வுமன்களின் கதைதான் படம்.

அனிமேஷனில் உருவாகியிருக்கும் இந்தப் படம், ரசிகர்களுக்குப் புதுமையான உணர்வினைக் கொடுத்தது. படமும் பெரிதளவுக்கு வரவேற்பை பெற்றது. மக்கள் விருப்பமாக மட்டுமல்லாமல், பல விருதுகளையும் மேடைகளையும் சந்தித்தது. ஏன், சினிமா உலகத்தின் தலைச்சிறந்த விருதாகப் பார்க்கப்படும் ஆஸ்கர் விருதில் சிறந்த அனிமேஷன் படத்துக்கான விருதும் பெற்றது.

ஒரு பாகம் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றால் இரண்டாம் பாகம் வராமல் எப்படி போகும். அதனால், இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்துக்கான வேலைகளைத் தொடங்கினார்கள் தயாரிப்பு நிறுவனமான சோனி மற்றும் மார்வெல் நிறுவனத்தினர். அதன்படி, இரண்டாம் பாகத்தை Joaquim Dos Santos இயக்க இருப்பதாக அறிவித்தனர். கூடுதலாக் இவரோடு இணைந்து ஜெஸ்டின் கே.தாம்சனும் இயக்க இருக்கார். இப்போத், இந்தப் படத்துக்கான ஸ்கிரிப்ட் மட்டும் இணைந்து உருவாக்கிவிட்டு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளை பிரிச்சுட்டு வேலை செய்ய இருக்காங்களாம்.

அதன்படி, படமானது 2022 அக்டோபர் 7ஆம் தேதி திரைக்கு வரும் என்பதை உறுதி செய்திருக்கிறார்கள். சீக்கிரமே படத்துக்கான பணிகள் தொடங்க இருக்கிறது.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

தன் வாயால் சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

7 நிமிட வாசிப்பு

தன் வாயால்  சர்ச்சையில் சிக்கிய அஷ்வின்

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

2 நிமிட வாசிப்பு

அதர்வா படத்தை ராஜ்கிரண் தவிர்க்கிறாரா?

புதன் 21 ஏப் 2021