மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தள்ளிப்போகும் சசிகுமார் படம்

சிவகார்த்திகேயனைத் தொடர்ந்து தள்ளிப்போகும் சசிகுமார் படம்

கொரோனா இரண்டாம் அலை அச்சுறுத்தல் காரணமாக மீண்டும் சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. குறிப்பாக, திரையரங்குகள் 50% விழுக்காடு மட்டுமே நிரப்ப வேண்டுமென்று கூறியிருக்கிறது. அதோடு, இரவு ஊரடங்கு, ஞாயிறு ஊரடங்கு காரணமாக திரையரங்கினை மூடிவிட திரையரங்க உரிமையாளர்கள் யோசித்துவருகிறார்கள்.

இப்படியான சூழலில், சிவகார்த்திகேயன் நடித்து நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவாகிவந்த படம் ‘டாக்டர்’. இந்தப் படத்தின் வெளியீடு ஏற்கெனவே மார்ச் 26லிருந்து மே 13ஆம் தேதிக்கு மாறியது. இப்போது, கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப் போவதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், சசிகுமார் படமும் தள்ளிப்போக இருப்பதாகச் சொல்கிறார்கள். சிவகார்த்திகேயன் நடித்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் & ரஜினிமுருகன் படங்களை இயக்கியவர் பொன்ராம். இவர் இயக்கத்தில் சசிகுமார் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘எம்ஜிஆர் மகன்’.

சசிகுமாருக்கு நாயகியாக மிருணாளினி ரவி நடித்திருக்கிறார். இவர்களோடு, சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரகனி, சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாடகர் அந்தோணிதாசன் படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

இந்தப் படமானது வருகிற 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் இப்படம் வெளியானால் நிச்சயம் மிகப்பெரிய நஷ்டத்தை சந்திக்க நேரிடும் என்பதால் படத்தை தள்ளிவைத்திருக்கிறார்கள்.

சிவகார்த்திகேயனின் டாக்டர் & சசிகுமாரின் எம்.ஜி.ஆர். மகன் படங்களின் அடுத்த ரிலீஸ் தேதி விரைவிலேயே தெரியவரும்.

- ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

செவ்வாய் 20 ஏப் 2021