மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

விஜய்சேதுபதியின் மகளாக நடித்தவர் தனுஷூக்கு ஜோடியாகிறாரா?

விஜய்சேதுபதியின் மகளாக நடித்தவர் தனுஷூக்கு ஜோடியாகிறாரா?

தமிழில் சினிமாவின் பிஸியான நடிகர்களில் ஒருவர் தனுஷ். தமிழ் மட்டுமின்றி பாலிவுட், ஹாலிவுட் என சிறகுகளை விரித்துக் கொண்டிருக்கிறார். தற்பொழுது, ரூஸோ சகோதரர்களின் இயக்கத்தில் ஹாலிவுட் படமான க்ரே மேன் படத்துக்காக அமெரிக்காவில் நடித்துக் கொண்டிருக்கிறார் தனுஷ்.

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கர்ணன் படம் வெளியாகிவிட்டது. தொடர்ந்து, கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ஜெகமே தந்திரம் மற்றும் இந்தியில் அக்‌ஷய்குமாருடன் ‘அட்ராங்கி ரே’ படங்கள் அடுத்து ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், கார்த்திக் நரேன் இயக்கத்தில் தனுஷ் 43, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இவர்களோடு, வெற்றிமாறன் இயக்கத்திலும், ராட்சசன் ராம்குமார் இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் தனுஷ். இந்த இயக்குநர்களோடு, பாலாஜி மோகனும் சமீபத்தில் இணைந்தார்.

தனுஷ் - பாலாஜி மோகன் கூட்டணியில் ஏற்கெனவே மாரி மற்றும் மாரி 2 படங்கள் வெளியானது. கமர்ஷியலாக படமும் நல்ல வரவேற்பைப் பெற்றது. மூன்றாவது முறையாக இந்தக் கூட்டணி இணைய இருக்கிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இந்தப் படத்துக்கான முதல்கட்டப் பணிகள் தற்பொழுது போய்க் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தில் நாயகி தேர்ந்தெடுக்கும் பணிகள் தற்பொழுது போய்க்கொண்டிருக்காம்.

இந்தப் படத்தில் நாயகியாக நடிக்க வைக்க லேட்டஸ்ட் சென்சேஷனல் க்ரித்தி ஷெட்டியிடம் பேசிக் கொண்டிருக்கிறார்களாம். தெலுங்கில் சமீபத்தில் வெளியான உப்பென்னா படத்தில் நடித்தவர். இந்தப் படத்தில் டெரர் வில்லனாக விஜய்சேதுபதி நடித்திருந்தார். விஜய்சேதுபதியின் மகளாக, படத்தின் நாயகியாக நடித்தவர் க்ரித்தி ஷெட்டி. இவரை தமிழுக்குக் கொண்டுவர தற்பொழுது பேச்சுவார்த்தைப் போய்க் கொண்டிருக்கிறது.

தற்பொழுது, தெலுங்கில் ‘ஷாம் சிங்கா ராய்’, ‘ஆ அம்மாயி குறிஞ்சி மீகு செப்பாலி’ படங்களில் நடித்துவருகிறார். தமிழில் முதல் படமே தனுஷூடன் நடித்தால் நிச்சயம், தமிழிலும் பெரும் கவனம் ஈர்ப்பார் என்பதில் சந்தேகமில்லை.

- தீரன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

செவ்வாய் 20 ஏப் 2021