மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 20 ஏப் 2021

கைது செய்யப்பட்டால் ஊர்வலமாக செல்வேன்: மன்சூர் அலிகான்

கைது செய்யப்பட்டால் ஊர்வலமாக செல்வேன்: மன்சூர் அலிகான்

தான் கைது செய்யப்பட்டால், ஊர்வலமாக சென்று சரணடைவேன் என்று கூறி நடிகர் மன்சூர் அலிகான் அதிரவைத்துள்ளார்.

நடிகர் விவேக்,கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட மறுநாள் மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் மன்சூர் அலிகான், கொரோனா தடுப்பூசி குறித்தும், அரசியல்வாதிகள் குறித்தும் சில கருத்துகளை தெரிவித்தார். அவரது பேச்சு சமூக வலைதளங்களில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாஜகவின் பாரத பிரதமர் மக்கள் நலத் திட்டங்கள் பிரச்சார விளம்பர அமைப்பின் செயலாளர் ராஜசேகரன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் நேற்று ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், ‘கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டதால்தான் நடிகர் விவேக்குக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதாகவும், யாரும் முகக்கவசம் அணிய வேண்டாம் என்றும், சுகாதாரத் துறை செயலாளர் குறித்தும் சர்ச்சைக்குரிய கருத்துகளை மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தும் வகையில் பேசி வருகிறார். எனவே, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது. இதே காரணத்தைக் கூறி, சென்னை மாநகராட்சி சார்பிலும் மன்சூர் அலிகான் மீது டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இது குறித்து மன்சூர்அலிகான், “சட்ட நடைமுறைக்காக முன்ஜாமீன் கேட்டுள்ளேன் காவல்துறை கைதுக்கெல்லாம் நான் பயப்பட்டதில்லை. கைது செய்யப்பட்டால், ஊர்வலமாக சென்று சரணடைவேன். இது மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும். நான் எத்தனையோ பிரச்சினைகள் குறித்து குரல் கொடுத்துள்ளேன். அப்போதெல்லாம் என் வீட்டில், ‘இது உங்களுக்குத் தேவையா’ என திட்டுவார்கள். ஆனால் கொரோனா தடுப்பூசி குறித்து பேசிவிட்டு வீட்டுக்குச் சென்றபோது பாராட்டினார்கள்” என கூறினார்.

இதுபற்றி மன்சூர் அலிகான் வட்டாரத்தில் பேசியபோது, “விவேக் மரணம் குறித்து கோடான கோடி மக்கள் மனதில் இருந்த ஒரு சிறிய சந்தேகத்தை தான் அவர் வெளிப்படுத்தியுள்ளார். சமூக வலைத்தளமெங்கும் இதை நீங்கள் காணலாம்! நடிகர் விவேக்கை பொறுத்த வரை அவர் கொரானா தடுப்பூசியின் அவசியத்தை உணர்த்தவே ஊசி போட்டுக் கொண்டார். ஆனால், அதன்பின்பு ஏற்பட்ட உடனடி மரணமோ அந்த தடுப்பூசியின் ஆபத்தை உணர்த்துவதாக எதிர்வினையாற்றிவிட்டது! மத்திய மாநிலஅரசுகள் என்ன செய்திருக்க வேண்டும்…? விவேக் மரணம் தொடர்பாக ஒரு மருத்துவ ஆய்வை செய்திருக்க வேண்டும். அந்த உடற் கூராய்வை திறந்த மனதுடன் பரிசீலனைக்கு உட்படுத்தி இருக்க வேண்டும். அதை மக்களிடம் வெளிப்படுத்தி இருந்தால் அனைவருக்கும் தெளிவு கிடைத்திருக்கும். நடக்கக் கூடாத மரணம் நடந்துவிட்டது. ஒரு விபத்தைப் போல அதை மூடி மறைப்பதைவிட அதிலிருந்து படிப்பினை பெறுவது தான் நாட்டிற்கும், மக்களுக்கும் பலனளிக்கும். அடிப்படையான சந்தேகங்களைக் கூட விளக்க முன்வராமல், அவசரமாக விளக்கம் தந்து அதை கேள்வியில்லாமல் ஏற்க வேண்டும் என்றால், நமது ஜனநாயகம் நமக்கு தந்துள்ள பேச்சு, எழுத்து சுதந்திரத்தை பறிப்பதாகவே கருத வேண்டியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் தடுப்பூசி தொடர்பான பக்க விளைவுகளை கண்காணிக்கும் கமிட்டியான AEFI எனப்படும் Adverse Events Following Immunization சொல்வது என்ன? தடுப்பூசி போட்டுக் கொண்ட 30 நாட்களுக்குள் எந்த ஒரு மனிதருக்கும் ஏற்படும் உடல் உபாதைகள், உடலில் தோன்றும் மாற்றங்கள் அல்லது மரணங்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்கிறது. இந்தியாவில் அந்த 30 நாள் என்ற கால அளவை அரசாங்கம் தன்வசதிக்கு ஏற்ப 14 நாட்கள் என குறைத்து கொண்டது. ஆனால், அந்த 14 நாட்களில் ஏற்படும் பக்கவிளைவுகளையாவது பதிவு செய்ய முன்வருவது தானே அறிவியல்பூர்வமான செயலாக இருக்க முடியும். அரசாங்கமும், அறிவியலாளர்களும் சரியாக விளக்கம் தர வேண்டும் என்பதே மக்கள் எதிர்பார்ப்பு. நியாயமான சந்தேகத்தை வெளிப்படுத்திய வகையிலும், கொரோனா தொடர்பாக நடத்தப்பட்டு வரும் அதிகார அத்துமீறல்களின் மீதான வலியை வெளிப்படுத்தியதிலும் மன்சூர் அலிகான் பேச்சை கோடிக்கணக்கான மக்கள் தங்கள் குரலாகவே உணர்ந்தனர். அவர் வெளிப்படுத்திய விதம் கரடுமுரடாக இருக்கலாம். ஆனால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு நேர்மையான பதில் அளிக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் அரசுகளுக்கு உண்டு அதைவிடுத்து புகார், கைது, வழக்கு என பூச்சாண்டி காட்டுவது தேவையில்லாதது” என்றனர்.

இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 20 ஏப் 2021