மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஏப் 2021

புதிய தமிழ்ப்படங்கள் வெளியீடு ஒத்திவைப்பு!

புதிய தமிழ்ப்படங்கள் வெளியீடு ஒத்திவைப்பு!

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தபடுகிறது எனவே, திரையரங்குகளில் இரவுக் காட்சி. இரவு நேர ஊரடங்கு விலக்கிக்கொள்ளப்படும் வரையில் நடைபெற வாய்ப்பு இல்லை என்கின்றனர் திரையரங்குகள் வட்டாரத்தில்.

கொரோனா தொற்று இரண்டாம் அலை அச்சத்தின் காரணமாகக் கடந்த ஒரு வார காலமாக திரையரங்குகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. குடும்பத்துடன் படம் பார்க்க வருவது முற்றிலுமாக நின்றுபோனது.

வெளிநாட்டு உரிமம், கேரளா, கர்நாடகா உரிமைகளின் மூலம் தேவையான அளவு வியாபாரம் கொரோனாவுக்கு பின் இல்லை. முழுக்க தமிழக திரையரங்குகள் மூலம் படத்தின் முதலீட்டில் 60% அசலை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். இதன் காரணமாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள "டாக்டர்" சசிக்குமார் - சத்யராஜ் நடிப்பில் பொன்ராம் இயக்கியுள்ள" எம்.ஜி.ஆர் மகன் ஆகிய படங்கள் தேதி குறிப்பிடாமல் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதுசம்பந்தமாக ஸ்கீரின் செவன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“அன்புள்ள ஊடக மற்றும் திரையுலக நண்பர்களே,எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் தொடக்கத்திலிருந்தே, நீங்கள் அனைவரும் உங்கள் முழு ஆதரவை வழங்கி வருகிறீர்கள்.

எம்.ஜி.ஆர் மகன் திரைப்படம் ஏப்ரல் 23 அன்று வெளியிடப்படும் என ஏற்கனவே அறிவித்திருந்தோம்.

தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக இருப்பதால் எங்கள் தயாரிப்பு நிறுவனம் சார்பில் அனைவரின் நலனையும் கருத்தில் கொண்டு சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளது. இத்திரைப்படத்தில் பணியாற்றிய பல்வேறு தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் தொழிலாளர்களின் கடின உழைப்பு, சரியான முறையில் மக்களைச் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்திலும், மற்றும் வினியோகஸ்தர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதியை ஒத்தி வைக்க முடிவு எடுத்திருக்கிறோம்.

தமிழ்நாடு முழுவதும் வினியோகஸ்தர்களுடன் கலந்து ஆலோசித்த பின்னர், சூழல் மிகவும் உகந்ததாக மாறும் பட்சத்தில் எம்.ஜி.ஆர் மகன் திரைப்படத்தைப் பார்வையாளர்களிடம் கொண்டு செல்ல முடிவு செய்துள்ளோம்.

அனைவரும் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள். மிக விரைவில் திரையரங்குகளில் சந்திப்போம்” என கூறப்பட்டுள்ளது.

-இராமானுஜம்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

திங்கள் 19 ஏப் 2021