மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 19 ஏப் 2021

வின்டர் இஸ் கம்மிங்; மீண்டும் கேம் ஆஃப் த்ரோன்!

வின்டர் இஸ் கம்மிங்; மீண்டும் கேம் ஆஃப் த்ரோன்!

ஹாலிவுட்டில் உருவாகும் திரைப்படங்களுக்கு எந்த அளவுக்கு வரவேற்பும், எதிர்பார்ப்பும் இருக்கிறதோ, அதுபோல ஹாலிவுட் வெப் சீரிஸ்களுக்கும் உலகமெங்கும் ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. அப்படி, உலகமெங்கும் பெரும் வெற்றியைப் பெற்ற வெப் சீரிஸ் கேம் ஆஃப் த்ரோன்.

கேம் ஆஃப் த்ரோனின் முதல் சீசன் 2011இல் வெளியானது. முதல் சீசனில் தொடங்கிய ஃபீவர் இறுதி சீசனான எட்டாவது சீசன் வெளியான 2019ஆம் ஆண்டுவரை நீண்டது. எட்டாவது சீசனோடு கேம் ஆஃப் த்ரோன் முடிந்ததையே ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.

சொல்லப்போனால், இந்த கேம் ஆஃப் த்ரோன் ஆனது அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் ஜார்ஜ் மார்ட்டின் என்பவரால் எழுதப்பட்ட பிரபல நாவலான ‘எ சாங் ஆஃப் ஐஸ் அண்ட் சாங்’ என்பதை மையமாகக்கொண்டு உருவானது. மீண்டும் கேம் ஆஃப் த்ரோன் கிடையாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நிலையில், மீண்டும் கேம் ஆஃப் த்ரோன் உருவாகி வருவதாக ஓர் இன்ப அதிர்ச்சியை வெளியிட்டிருந்தார் எழுத்தாளர் ஜார்ஜ் மார்ட்டின். என்ன விஷயமென்றால், கேம் ஆஃப் த்ரோனின் முதல் சீசனில் புரட்சிக்குப் பிறகான கதைகளாக திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும். புரட்சிக்குப் பிறகான ஏழு சாம்ராஜ்ஜியங்களை மையப்படுத்திய கதைதான் கேம் ஆஃப் த்ரோன்.

தற்போது, உருவாக இருக்கும் புதிய சீசனானது புரட்சிக்கு முன்பான மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் நடப்பது மாதிரியான கதைக்களமாம். அந்த நேரத்தில் இருந்த 10 சாம்ராஜ்ஜியங்களைப் பற்றிப் பேசும் கதைக்களம் என்று சொல்லப்படுகிறது.

இதற்கான, முதல்கட்ட பைலட் ஷூட் ஏற்கெனவே நடத்தி முடித்திருக்கிறார்கள் படக்குழுவினர். அடுத்தக் கட்டமாக, இந்த சீரிஸ்கான ஷூட்டிங்கைத் தொடங்கியிருக்கிறார்கள். வின்டர் சீசனில் இந்த சீரிஸ் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்காலிகமாக, இந்த புதிய வெப் சீரிஸுக்கு ‘தி லாங்கஸ்ட் நைட்’ என டைட்டில் உறுதி செய்திருக்கிறார்களாம். சீக்கிரமே வெப் சீரிஸின் டைட்டிலும், அதிகாரபூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.

- ஆதினி

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

திங்கள் 19 ஏப் 2021