மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 16 ஏப் 2021

அண்ணாத்த படத்தில் ரஜினி ரோல் எப்படி இருக்கும்?

அண்ணாத்த படத்தில் ரஜினி ரோல் எப்படி இருக்கும்?

ரஜினி நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் திரைப்படம் ‘அண்ணாத்த’. இந்தப் படத்தில் ரஜினியின் கதாபாத்திரம் எப்படி இருக்கும் என்பது குறித்த புதிய தகவல் கசிந்துள்ளது.

அஜித்துக்கு வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நான்கு படங்களைக் கொடுத்த சிவா இயக்கத்தில் ரஜினி நடித்துவருகிறார். இமான் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார். ரஜினியுடன் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி உள்ளிட்ட பலர் நடித்துவருகிறார்கள்.

சென்னையில் நடந்துவந்தப் படப்பிடிப்பு, அடுத்த நகர்வாக ஹைதாராபாத்தில் நடந்துவருகிறது. இந்தப் படத்தில் ரஜினிக்கென ஹியூமர் காட்சிகள் அதிகமாக இருக்குமாம்.

சமீபகாலமாகவே, கபாலி, காலா, பேட்ட, தர்பார் என சீரியஸான ரோல்களில் ஆக்‌ஷன் படங்களாகவே நடித்துவருகிறார் ரஜினி. இந்த படங்களிலிருந்து முற்றிலும் வேறொன்றாக அண்ணாத்த இருக்கும் என்கிறார்கள்.

பொதுவாக, ரஜினி படங்களில் காமெடியனுடனான ரஜினியின் ட்ராக்குகள் பட்டாசாக இருக்கும். ரஜினிக்குள் இருக்கும் ஹியூமர் ரசிகர்களை பலமுறை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அப்படியான, ஹியூமர் அண்ணாத்த படம் முழுவதும் இருக்கும் என்கிறார்கள். அதோடு, ஆக்‌ஷன் பெரிதாக படத்தில் இருக்காதாம். முழுக்க முழுக்க பேமிலி எண்டர்டெயின்மெண்டாக இருக்கும் என்று சொல்கிறார்கள் படப்பிடிப்பில் பணியாற்றும் கலைஞர்கள்.

ரஜினியின் அண்ணாத்த இறுதிக்கட்டப் படப்பிடிப்பை எட்டிவிட்டது. விரைவில் படம் முடிந்துவிடும் எகிறார்கள். அதோடு, இந்த தீபாவளிக்கு படம் வெளியாக இருக்கிறது. மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் குரலில் ரஜினியின் இண்ட்ரோ பாடல் உருவாகியிருக்கிறதாம். இந்த பாடல் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாகியிருக்கிறது.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 16 ஏப் 2021