மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

பிக்பாஸ் ரியோவின் பட ரிலீஸ் தேதி!

பிக்பாஸ் ரியோவின் பட ரிலீஸ் தேதி!

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகப்பெரிய பரபரப்பையும் கவனத்தையும் ஈர்த்தவர் ரியோ. தொலைக்காட்சியில் விஜேவாக பயணத்தைத் துவங்கியவர் நடிகராகவும் வளர்ந்துவருகிறார். இவர் ஹீரோவாக நடிக்க ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. 2019ல் வெளியான இந்தப் படத்தில் ரியோவுடன் ஆர்.ஜே.விக்னேஷ் மற்றொரு லீடாக நடித்திருந்தார்.

இந்தப் படத்துக்குப் பிறகுதான், பிக்பாஸ் தமிழில் போட்டியாளராக கலந்துகொண்டார். பிக்பாஸ் வீட்டுக்குச் செல்வதற்கு முன்பே படமாக்கப்பட்ட படம் தான் ‘ப்ளான் பண்ணிப் பண்ணனும்’.இந்தப் படத்தில் ரியோவுடன் ரம்யா நம்பீசன், எம்.எஸ்.பாஸ்கர், சந்தான பாரதி, ரோபோ சங்கர், நரேன், பால சரவணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தை பத்ரி வெங்கடேஷ் இயக்கியிருந்தார். அதோடு, படத்துக்கு இசை யுவன் ஷங்கர் ராஜா.

இந்தப் படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது படக்குழு. அதன்படி, படத்தை வருகிற ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட இருக்கிறது படக்குழு. இந்த தேதியில் தான், விஜய்சேதுபதி நடிப்பில் மறைந்த எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருக்கும் லாபம் படமும் வெளியாக இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

தற்பொழுது, ப்ளான் பண்ணிப் பண்ணனும் படத்தின் ரிலீஸை அறிவிக்க வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவும் இணையத்தில் அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

- ஆதினி

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

வியாழன் 15 ஏப் 2021