மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

ஆர்ட்டிகிள் 15 ரீமேக்: உடனடியாகத் தொடங்குவதன் பின்னணி!

ஆர்ட்டிகிள் 15 ரீமேக்:  உடனடியாகத் தொடங்குவதன்  பின்னணி!

அரசியலில் முகம் பரிட்சயமாவதற்கு, சினிமாவைக் கருவியாகப் பயன்படுத்திக் கொள்வதென்பது தமிழகத்தில் காலம் காலமாக நடந்து வருகிறது. அப்படி, நடிகராக பிரபலமாகி, அரசியலில் அதிரடி காட்டி வருகிறார் உதயநிதி. திமுக இளைஞரணிச் செயலாளராக, சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளராக களம் காண்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் அனல் பறக்கும் பேச்சினை வீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறார். அரசியல் ஒருபக்கம் இருக்க, சினிமாவுக்கும் இணையான கவனம் செலுத்திவருகிறார்.

தேர்தல் பிரச்சாரம் முடிந்த கையோடு பட வேலைகளைத் தொடங்கிவிட்டார் உதயநிதி. ஏற்கெனவே, மகிழ்திருமேனி இயக்கத்தில் உதயநிதி நடிக்க இருந்த படம் தொடங்க இருந்தது. அதற்குள் தேர்தல் வந்ததால், அந்தப் படத்தை அப்படியே விட்டுவிட்டார்.

சொல்லப் போனால், மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்க வேண்டிய படம்தான் முதலில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இந்தியில் வெளியாகி ஹிட்டான ஆர்ட்டிகிள் 15 படத்தை முதலில் தொடங்குகிறார் உதயநிதி.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு உடனடியாகத் தொடங்குகிறது. அதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. பாலிவுட்டில் ஆயுஷ்மான் குர்ரானா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் பெரிய ஹிட். சமூகத்தின் மீதான கறையாக இன்னும் தொடரும் சாதிய அடுக்குமுறைகளை, சாதிய வன்மங்களை இந்தப் படம் பேசியிருக்கும். இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் உதயநிதி நடிக்க அருண்ராஜா காமராஜ் இயக்க ஒப்பந்தமானது.

அதன்படி, படத்துக்கான அதிகாரபூர்வ அறிவிப்பும் கடந்த வருடம் ஆகஸ்ட் 25ஆம் தேதியே வெளியானது. இருப்பினும், இந்தப் படம் தொடங்கவே இல்லையென்பதால் படம் டிராப் என ஒருபக்கம் செய்திகள் பரவின. அதோடு, தேர்தலில் வென்று எம்.எல்.ஏ. ஆக ஆகிவிட்டால் ஆர்ட்டிகிள் 15 ரீமேக் நடக்காதோ எனும் அச்சமும் படக்குழுவுக்கு இருக்கிறது. படக் குழுவினருக்கு நம்பிக்கை விதைக்கும் விதமாக முதல்கட்டமாக ஆர்ட்டிகிள் 15 படப்பிடிப்பை முதலில் தொடங்கியிருக்கிறாராம் உதயநிதி. இந்தப் படத்தோடு மகிழ்திருமேனி படமும் விரைவில் உருவாக இருக்கிறது.

- தீரன்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

வியாழன் 15 ஏப் 2021