மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 15 ஏப் 2021

இந்த முறை ஆஸ்கர் எப்படி இருக்கப் போகிறது?

இந்த முறை ஆஸ்கர் எப்படி இருக்கப் போகிறது?

திரையுலகின் உயரிய விருதாகவும், கெளரவமாகவும் பார்க்கப்படுவது அகாடமி விருது என்றழைக்கப்படும் ஆஸ்கர் விருது விழா.

ஒவ்வொரு வருடமும் ஆஸ்கரை கையில் ஏந்தும் பிரபலங்கள் உலகமெங்கும் பிரபலமாகிறார்கள். ஹாலிவுட் சினிமாவை மட்டுமின்றி உலக சினிமாவையே கொண்டாடும் ஒன்றுதான் ஆஸ்கர். 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான ஆஸ்கர் விருது விழாவானது கொரோனா அச்சுறுத்தலால் தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது. இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருது விழாவில் யார் வெல்லப் போகிறார், எந்தப் படம் மகுடம் சூட்டப் போகிறது என்பதே பலரின் எதிர்பார்ப்பும்.

ஆஸ்கரின் பிரமாண்டமான விருது வழங்கும் விழா வருகிற ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற இருக்கிறது. திரையரங்கில் வெளியாகும் திரையரங்குகள் மட்டுமின்றி, ஓடிடி தளங்களில் வெளியான திரைப்படங்களும் ஆஸ்கர் நாமினேஷனில் தேர்வாகியிருக்கிறது. ஏனெனில், சென்ற வருடம் கொரோனாவினால் திரையரங்குகளில் பெரிதாக படங்கள் வெளியாகாததால், ஓடிடியில் வெளியான படங்களும் லிஸ்டில் இடம்பெற்றுள்ளன.

ஓவ்வொரு வருடமும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் ஆஸ்கர் விருது விழா, இந்த வருடம் எப்படி இருக்கப் போகிறது என்பதைப் பார்க்க பெரும் எதிர்பார்ப்பில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

தற்போது, ஆஸ்கரில் விருது வழங்க இருக்கும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியிருக்கிறது. அந்த லிஸ்டில் ஹாலிவுட் பிரபலங்களான ஹாரிசன் ஃபோர்ட், பிராட் பிட், Halle Berry, Reese Witherspoon, Don Cheadle, Renee Zellweger, Regina King, Joaquin Phoenix, Rita Moreno, Laura Dern, Zendaya, Angela Bassett, Bryan Cranston, Marlee Matlin மற்றும் இவர்களுடன் சென்ற 2019ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் நாயகன் Bong Joon Ho-ம் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்.

- ஆதினி

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

வியாழன் 15 ஏப் 2021