மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

திரெளபதி பாணியில் சமூகம் கொண்டாடும் கர்ணன்!

திரெளபதி பாணியில் சமூகம் கொண்டாடும் கர்ணன்!

தமிழகம் முழுவதும் கர்ணன் திரையரங்குகளில் கொரோனா பரவலைப் பற்றிய பயமின்றி இளைஞர்கள் கூடி கல்லாவை நிரப்பி வருகின்றனர். படம் பற்றிய எதிர்மறையான விமர்சனங்கள், அதேபோன்று படத்தைப் பாராட்டி விமர்சனங்கள் என சம அளவில் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அசுரன் படம் வணிக ரீதியாக வெற்றிபெற்ற பின் தனுஷ் நடிப்பில் வெளிவந்த பட்டாஸ் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. கர்ணன் இந்த இரண்டு படங்களைக்

காட்டிலும் அதிகபட்ச வசூலை குவித்து வருகிறது. சாதிக்கு ஆதரவான படம் கர்ணன் என்கிற குற்றசாட்டு, விவாதம் முதல் நாளே சமூக வலைதளங்களில் தொடங்கியது. இதை முறியடிக்கவும் சாதி உரிமை பேசும் படமாக கர்ணன் அடையாளப்படுத்தபட்டு விடக்கூடாது என்பதற்காகவும் தயாரிப்பாளர் கலைப்புலி தாணு சினிமா, அரசியல், பொதுவானவர்கள் என அனைத்து தரப்பு விஐபிக்களிடமும் படம் பற்றி பாசிட்டிவான விமர்சனங்களைப் பதிவு செய்யுமாறு தனிப்பட்ட முறையில் வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

ஆனால், களநிலவரம் வேறு மாதிரியான சூழலை உருவாக்கி வருகிறது. 2019இல் மோகன்ஜீ இயக்கத்தில் ரிச்சர்ட் நாயகனாக நடித்து வெளியான 'திரெளபதி' படத்தை தணிக்கை செய்து வெளியிடுவதற்கு கடுமையான நெருக்கடி போராட்டங்களை எதிர்கொண்டார் தயாரிப்பாளரும் இயக்குநருமான மோகன்ஜீ. படம் வெளியான பின்பு அதனை தங்களுடைய படமாக கொண்டாட தொடங்கியது வடமாவட்டங்களில் வன்னிய சமூகமும் கொங்கு மண்டலத்தில் கொங்கு வேளாளர்களும் தென்மாவட்டங்களில் முக்குலத்து சமூகமும். இதன் காரணமாக 65 லட்ச ரூபாயில் தயாரிக்கப்பட்ட 'திரெளபதி' 19 கோடி ரூபாய் அளவுக்குத் தமிழகத்தில் வசூல் செய்தது.

அதேபோன்ற நிலை கர்ணன் திரைப்படத்துக்கும் உருவாகியுள்ளது. கொரோனா பயம் காரணமாக குடும்பங்கள் வர பயப்படும் நிலையில் கர்ணன் படம் பார்க்க இதுவரை திரையரங்குக்கு வந்த கூட்டம் அனைத்தும் 35 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள். தன் எழுச்சி, என் சமூக உரிமை பேசும்படம் என்கிற மனோ நிலையில் குறிப்பிட்ட இரண்டு சமூகத்தினர் படம் பார்க்க அதிகளவில் குடும்பமாக தியேட்டருக்கு வர தொடங்கியுள்ளனர்.

இதற்கு காரணம் இது நமது படம், நம் உரிமை பேசும்படம், நமது பலத்தைக் காண்பிக்க வேண்டும்... எனவே தமிழகம் முழுவதும் குடும்பத்துடன் சென்று கர்ணன் படம் பார்க்க வேண்டும் என்று படத்தில் யாருடைய உரிமை பேசப்பட்டிருக்கிறதோ அந்த சமூக அமைப்பின் சார்பில் அன்பு கட்டளை பிறப்பிக்கப்பட்டிருக்கிறது . அதனால்தான் அசுரன் திரையரங்குகளில் ஓடி முடியும்போது என்ன வருவாய் கிடைத்ததோ, அதே அளவு தொகை மூன்று நாட்களில் கர்ணன் படத்துக்கு வருவாயாகக் கிடைத்திருக்கிறது என்கின்றனர் தியேட்டர், விநியோகஸ்தர்கள் வட்டாரங்களில்.

-இராமானுஜம்

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக...

4 நிமிட வாசிப்பு

தமிழ் சினிமா வரலாற்றில் முதன்முறையாக...

ஐபிஎல்: நடக்காத ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்!

4 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: நடக்காத ஆட்டங்களை நடத்த இலங்கை விருப்பம்!

பவித்ராவுக்கு குவிகிறது.. அஸ்வினுக்கு கை நழுவுகிறது !

4 நிமிட வாசிப்பு

பவித்ராவுக்கு குவிகிறது.. அஸ்வினுக்கு கை நழுவுகிறது !

புதன் 14 ஏப் 2021