மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

அந்நியன் பாலிவுட் ரீமேக் 2022-ல் துவங்க காரணம் ?

அந்நியன் பாலிவுட் ரீமேக் 2022-ல்  துவங்க காரணம் ?

அந்நியன் படத்தின் பாலிவுட் ரீமேக் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

2005 ஆம் ஆண்டு விக்ரம், சதா , விவேக், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் அந்நியன். ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப் படத்துக்கு இசையமைத்திருந்தார். இப்படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட் ஆனது. தற்போது, இந்தப் படம் இந்தியில் ரீமேக் ஆக இருக்கிறது.

அந்நியன் இந்தி ரீமேக்கில் விக்ரம் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருக்கிறார். இயக்குனர் ஷங்கர் பாலிவுட்டில் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தை ஜெயந்திலால் தயாரிக்க இருக்கிறார்.

இந்தப் படமானது 2022ஆம் ஆண்டு சைக்கலாஜிக்கல் த்ரில்லராக உருவாக இருக்கிறது.

ஏன் 2022 ? என சந்தேகம் வரலாம். அதற்கும் காரணம் இருக்கிறது. கமல்ஹாசன் நடிக்க இந்தியன் 2 படம் இன்னும் முடியவில்லை. 20% படப்பிடிப்பு இன்னும் பாக்கி இருக்கிறது. அதோடு, ராம்சரண் நடிக்க ஷங்கர் இயக்கும் படம் இந்த வருடம் உருவாக இருக்கிறது. அதனால், அடுத்த வருடம் இந்தப் படம் துவங்கும்.

- ஆதினி

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு விளக்கம்!

4 நிமிட வாசிப்பு

மன்மத லீலை சர்ச்சை: வெங்கட் பிரபு  விளக்கம்!

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

புதன் 14 ஏப் 2021