மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

ஜானி டெப் மீண்டும் ஜாக்ஸ் ஸ்பாரோ-வாக வருவாரா?

ஜானி டெப் மீண்டும் ஜாக்ஸ் ஸ்பாரோ-வாக வருவாரா?

ஒரு படத்தின் பெயரைச் சொன்னதும் அதில் நடித்த நடிகர்கள், இயக்கிய இயக்குநர்கள், படத்தின் கதாபாத்திரங்கள் நினைவுக்கு வந்தால் அதுதான் அந்தப் படத்தின் வெற்றி. அதே மாதிரி, ஒரு கேரக்டரின் பெயரைச் சொன்னதும் படம் பற்றிய முழு ஹிஸ்ட்ரியும் நினைவுக்கு வந்தால், அதுதான் ஒரு நடிகரின் வெற்றி. அப்படியான ஒரு நடிகர் ஜானி டெப்.

ஜானி டெப் என்பதை விட, அவர் ஏற்று நடித்த கேப்டன் ஜாக்ஸ் ஸ்பாரோ எனும் பெயர் தான் அனைவருக்கும் பரிட்சயம். பைரட்ஸ் ஆஃப் கரிபியன் பட சீரிஸ் தவிர, எக்கச்சக்கமாக எத்தனையோ படங்கள் நடித்துவிட்டாலும், ரசிகர்களுக்கு இவர் ஜாக்ஸ் ஸ்பாரோ தான்.

ஜானி டெப் நடித்து பைரட்ஸ் ஆஃப் கரிபியன் திரைப்படங்களின் ஐந்து பாகங்கள் இதுவரை வெளியாகியிருக்கிறது. இப்போ, இந்தப் படத்துக்கான ஆறாவது பாகத்துக்கான வேலைகள் மும்மரமா நடந்துகொண்டுவருகிறது.

அனால், இந்த ஆறாவது பாகத்துல ஜாக்ஸ் ஸ்பாரோவா ஜானி டெப்புக்கு பதிலக, ஒரு நடிகையை நடிக்க வைக்கப் போறதா 2019ல் டிஸ்னி நிறுவனம் அறிவித்திருந்தனர். இந்த அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்ததோடு, எதிர்ப்பும் தெரிவித்து வந்தனர்.

கொரோனா காரணமாக படத்தின் முதல் கட்டப் பணிகள் துவங்குவதில் சிக்கல் இருந்தது. தற்பொழுது, மீண்டும் படத்தின் பணிகளைப் படக்குழு துவங்கியிருக்கிறது.

இதனாக், ஜாக்ஸ் ஸ்பாரோ ரசிகர்கள் “We Want Johnny Depp Back As Captain Jack Sparrow”- எனும் தலைப்பில் ஒரு ஒட்டிங் எடுத்துக் கொண்டு வருகிறார்கள் ரசிகர்கள். இந்த ஓட்டிங் ஒரு மில்லியனை தொட்டால் ஜானி டெப்பே மறுபடியும் ஜாக்ஸ் ஸ்பாரோவாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.

இப்போதைக்கு இந்த ஓட்டிங் 5,66,500-ஐ கடந்து கொண்டிருக்கிறது. சீக்கிரமாகவே 1 மில்லியனை தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- தீரன்

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

3 நிமிட வாசிப்பு

ஹிட் அடித்த பாலகிருஷ்ணா, தோல்வியில் மோகன்லால்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

3 நிமிட வாசிப்பு

மோகன்லால் விரும்பி கேட்ட பிரபு

புதன் 14 ஏப் 2021