மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

என்னை திட்டாதிங்க: நட்டி நடராஜ்

என்னை திட்டாதிங்க: நட்டி நடராஜ்

கலைப்புலி தாணு தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள  இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக தேனி ஈஸ்வர்,

இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஆகியோர் பணிபுரிந்துள்ளனர்.

ஏப்ரல் 9-ம் தேதி வெளியான இந்தப் படத்துக்கு விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.  சினிமா விமர்சகர்களை கடந்து சமூக வலைத்தளத்தில் ஆதரவு, பாராட்டு, எதிர்ப்பு என சமவிகிதத்தில் கர்ணன் படம் விவாதத்திற்குள்ளாக்கப்பட்டு வருகிறது. அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும் படத்தை பார்த்துவிட்டு தவறுகளையும், நிறைகளையும் சுட்டிக்காட்டி கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் கர்ணன் படத்தில் கதாநாயகன் தனுஷ் கதாபாத்திரத்துக்கு வில்லனாக கண்ணபிரான் எனும் எதிர்மறை கதாபாத்திரத்தில் ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் நடித்திருந்தார். அவருடைய நடிப்புக்கு விமர்சகர்கள் தரப்பில் பாராட்டு தெரிவித்து வருகிறார்கள்.

அதே வேளையில், தனுஷ் ரசிகர்கள் அவரைத் திட்டியும் வருகிறார்கள். தன்னை தொலைபேசி வாயிலாகவும் திட்டிவருவது குறித்து நட்டிநட்ராஜ் தனதுட்விட்டர்பதிவில்

என்ன திட்டாதீங்க எப்போவ்.. ஆத்தோவ்..அண்ணோவ்...கண்ணபிரானா நடிச்சுதான்பா இருக்கேன். போன் மெசேஜ்ல.. திட்டாதீங்கப்பா.. முடியலப்பா.. அது வெறும் நடிப்புப்பா..ரசிகர்களுக்கு எனது நன்றி." என தெரிவித்திருக்கிறார்.

இராமானுஜம்

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

8 நிமிட வாசிப்பு

முதல்வர் வீட்டின் முன் உண்ணாவிரதம் இருப்பேன்: டி.ராஜேந்தர்

புதன் 14 ஏப் 2021