மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 14 ஏப் 2021

ரிட்டன் டிக்கெட்: அப்டேட் குமாரு

ரிட்டன் டிக்கெட்: அப்டேட் குமாரு

மும்பைய பாத்ததே இல்லை, ஒரு நாள் கூட்டிக்கிட்டு போடானு என் ஃபிரண்டுக்கிட்ட பல வருசங்களுக்கு முன்னாடி சொல்லி வச்சிருந்தேன். நேத்து அந்த பய எனக்குப் போனைப் போட்டு, ‘மாப்ள என் பொண்டாட்டிக்கு வளைகாப்பு, அங்க ஊருக்கு வரமுடியலை. மும்பையில வீட்லயே நடத்துறோம். நீ வேணா மும்பைக்கு வர்றியா அப்படியே சுத்திப் பார்க்கலாம். டிக்கெட்டும் நானே போட்டுடறேன்’னு கூப்பிடுறான். ‘ரிட்டன் டிக்கெட் போடுவியா”னு கேட்டுட்டு போனை வச்சிட்டேன்.

நம்ம மேல எத்தனை அக்கறை இவங்களுக்கு... இதுக்கு பேர்தான் friend is need is a friend indeed ஆ?

நீங்க அப்டேட் பாருங்க

நெல்லை அண்ணாச்சி

லஞ்சத்துக்கு ரசீது கொடுத்தால்

எல்லா நாளும் " மங்களகரமான " நாட்களே..!!!

ரஹீம் கஸ்ஸாலி

உலகத்திலேயே ஐ.டி. ரெய்டைக்கூட தம்பிக்கு ஒரு ஊத்தப்பம் ரேஞ்சில் டீல் செய்தது திமுகவாகத்தான் இருக்கும்.

பர்வீன் யூனுஸ்

மாத ஆரம்பத்தில் சம்பளம் கிடைத்து, நமக்கு some பலம் கிடைத்து விடுகிறது.

நாகராஜ சோழன் MA.MLA

அன்பான தனுசு ராசி நேயர்களே, இந்த தமிழ் புத்தாண்டு உங்களுக்கு....

நீ ஆங்கில புத்தாண்டுக்கு சொன்னதே ஒன்னும் நடக்கல, இதுல தமிழ் புத்தாண்டு பலன்கள் வேரையா?

மித்ரன்

உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு கொரோனா ~ செய்தி

கொரோனா ~ எங்கே என்னை விரட்ட பயன்படுத்திய எவர்சில்வர் தட்டையும், கரண்டியையும் காணோம்..?!

செந்திலின்_கிறுக்கல்கள்

கொரானாவோடு வாழ பழகியதை விட மாஸ்கோடு வாழ பழகியாச்சி..!

யதார்த்தம்

நாகராஜ சோழன் MA.MLA

யோவ், ஆபரேசன் பன்ன 20 ஆயிரம் தானே சொன்னீங்க, இப்ப எதுக்கு 40 ஆயிரம் கேக்கறீங்க?

மங்களகரமான நாள்ல பண்ணியதால ஃபீஸ் ஜாஸ்தி...

மயக்குநன்

'கிளீன் போல்டு' ஆகிவிட்டார் மம்தா பானர்ஜி!- மோடி.

அதை... மக்கள் எனும் 'அம்பயர்'தான் முடிவு பண்ணனும் தெய்வமே..!

balebalu

அரசு அலுவலகத்துக்கு எதுக்கு அஷ்டமி, நவமி ல தான் போகணும் ன்னு பிடிவாதம் பிடிக்குறீங்க ?

மங்களகரமான நாட்கள்ல போனா லஞ்சம் அதிகம் கேட்பாங்களே ?

PrabuG

போற போக்கை பார்த்தா 234 தொகுதியிலேயும் சுயேட்சையா ஜெயிச்சுடும் போலிருக்கு கொரோனா..

amudu

இலட்சம் தடுப்பூசிகளை வீணடித்தது மகாராஷ்டிரா அரசு. -பிரகாஷ் ஜாவடேகர்.

மகா"வேஸ்ட்"ரா அரசு.

மயக்குநன்

வெற்றுப் பேச்சு, பெருமை பேசுவதன் மூலம் கொரோனாவுக்கு எதிரான போரில் பிரதமர் வெற்றி பெற முடியாது!- ப.சிதம்பரம்.

ஆனா... அதை வச்சுத்தானே காங்கிரஸுக்கு எதிரான போரில் வெற்றி பெற்றாரு பாஸ்..?!

நாகராஜ சோழன் MA.MLA

மங்களகரமான நாள்ல சொத்து வாங்குனா நல்லதாமா...

~ யாருக்கு?

கவர்மெண்டுக்கு...

கோழியின் கிறுக்கல்!!

வீட்டில் mixie ஒழுங்காக வேலை செய்யலைனாலும்,

நம்மைப் போட்டு தான் அரைக்கிறார்கள்!

-லாக் ஆஃப்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

4 நிமிட வாசிப்பு

பொங்காத பொங்கல் திரைப்படங்கள்!

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

புதன் 14 ஏப் 2021