மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

ஐபிஎல்: 10 விநாடிக்கு 14 லட்சம் ரூபாய் விளம்பரக் கட்டணம்!

ஐபிஎல்: 10 விநாடிக்கு 14 லட்சம் ரூபாய் விளம்பரக் கட்டணம்!

தற்போது நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஒளிபரப்பில் 10 விநாடிக்கு 14 லட்சம் ரூபாய் விளம்பரக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் 3,800 கோடி ரூபாய் வருமானம் கிடைக்கிறது.

உலகில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் அதிக அளவில் வருமானம் கொட்டுவது ஐபிஎல் போட்டியில்தான். இதில் விளம்பரம் மற்றும் ஒளிபரப்பு மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கோடிக்கணக்கில் வருவாயை ஈட்டுகிறது.

அதனாலேயே, கடந்த (2020) ஆண்டு கொரோனா பரவல் இருந்தபோதிலும் இந்தப் போட்டியை கிரிக்கெட் வாரியம் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் நடத்தி முடித்தது. போட்டி ரத்து செய்யப்பட்டால் கிரிக்கெட் வாரியத்துக்கு 3,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படும் என்பதால் 13ஆவது ஐபிஎல் போட்டியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது.

தற்போது 14ஆவது ஐபிஎல் போட்டி இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் நேரடியாக ஒளிபரப்பு செய்யும் உரிமையைப் பெற்றுள்ளது. 2018ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை ஐந்து ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு செய்ய 16,347.50 கோடி ரூபாய்க்கு கிரிக்கெட் வாரியத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்துக்கு ஐபிஎல் போட்டியை ஒளிபரப்புவதன் மூலம் ஆண்டுக்கு 3,600 கோடி முதல் 3,800 கோடி வரை வருவாய் கிடைக்கிறது. அந்த நிறுவனம் 10 விநாடிக்கு விளம்பரக் கட்டணமாக 13 லட்சம் முதல் 14 லட்சம் ரூபாய் வரை பெறுகிறது. இது கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் போட்டியைவிட 14 முதல் 15 சதவிகிதம் அதிகமாகும்.

ஆண்டுக்கு ஆண்டு ஐபிஎல் போட்டியைப் பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 29 சதவிகிதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இன்னும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் விளம்பரக் கட்டணமும் உயர்த்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் மொத்தம் 60 ஆட்டங்கள் நடக்கின்றன. இந்தப் போட்டி மூலம் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பல்வேறு விளம்பரங்கள் வழியாக கோடிக்கணக்கில் பணத்தைச் சம்பாதித்துக் கொண்டே இருக்கிறது.

மொத்தத்தில், பிசிசிஐ அமைப்புக்கு ஐபிஎல் தொடர் கற்பக விருட்சம் என்றே சொல்லலாம். அள்ள அள்ள பணம்தான். அதற்கு காரணம் பார்வையாளர்கள் மத்தியில் இந்த தொடருக்குக் கிடைத்துவரும் வரவேற்பு. கடந்த 13ஆவது சீசன் அமீரகத்தில் நடத்தப்பட்டு இந்தியப் பார்வையாளர்கள் இல்லாததால் முதன்முறையாக ஐபிஎல் வருமானத்தில் 4 சதவிகிதம் குறைந்ததாகச் சொல்லப்பட்டது. இந்த ஆண்டு பார்வையாளர்கள் இல்லாத சூழலிலும் தொலைக்காட்சி வியூவர்ஸ்ஷிப் அதிகரித்து, 14ஆவது ஐபிஎல் தொடருக்குக் கைகொடுத்து வருகிறது.

-ராஜ்

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

12 நிமிட வாசிப்பு

ஆன்டி இண்டியன் - விமர்சனம்!

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்: விரைவில் விசாரணை அறிக்கை!

2 நிமிட வாசிப்பு

அர்ஜுன் மீது 'மீ டூ 'புகார்:  விரைவில் விசாரணை அறிக்கை!

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார் ...

3 நிமிட வாசிப்பு

அஜித்துக்கு கைதட்டல் வாங்கிக்கொடுத்த சிவசங்கர்: கே.எஸ்.ரவிகுமார்

செவ்வாய் 13 ஏப் 2021