மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

கர்ணன் படத்தில் வரலாற்றுப் பிழை: சுட்டிக் காட்டிய உதயநிதி

கர்ணன் படத்தில் வரலாற்றுப் பிழை: சுட்டிக் காட்டிய உதயநிதி

பரியேறும் பெருமாள் படத்தைக் கொடுத்த மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த ஏப்ரல் 09ஆம் தேதி வெளியான படம் கர்ணன்.  கொரோனா அச்சுறுத்தலால் 50%  திரையரங்க அனுமதிக்கு நடுவே வெளியாகியிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுவருகிறது.

சந்தோஷ் நாராயணனின் இசையும், தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவும் படத்தை வேறு ஒரு தளத்துக்குக் கொண்டு செல்கிறது. கர்ணனாக தனுஷ், கண்ணபிரானாக நட்ராஜ், கர்ணனின் காதலியாக திரௌபதையாக ரஷிஜா என மகாபாரத கதாபாத்திரங்களில் புரட்சி செய்திருக்கிறார் மாரி செல்வராஜ். அதோடு, தமிழக வரலாற்றில் நடந்த பல சம்பவங்கள் படத்தில் இடம் பெற்றிருப்பதாகவும் பல கருத்துகள் வெளியாகிவருகிறது.

இப்படம் குறித்து, திமுக இளைஞரணி செயலாளரும், நடிகருமான உதயநிதி ட்விட்டரில், “ ‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ளது. இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன். 1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில், அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாகக் காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி.” என்று பதிவிட்டுள்ளார்.

1997ல் அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் சம்பவத்தை மையமாக கொண்டே இந்தப் படத்தின் கதையானது அமைக்கப்பட்டிருக்கிறது. கொடியன்குளம் என்பதுக்குப் பதில் படத்தில் பொடியன்குளம் என ஊர் பெயரானது வருகிறது. அப்படி இருக்கையில், ஏன் திமுக ஆட்சியிலிருந்த 1995 கதை நடப்பது போல படத்தில் சித்தரிக்கப்பட்டிருக்கிறது என பலரும் கேள்வி எழுப்பிவரும் நிலையில், படக்குழுவிடமிருந்து எந்த விதப் பதிலும் இல்லை. இந்நிலையில், உதயநிதி நடுவில் புகுந்து இந்த சர்ச்சைக்குப் பதிலளித்துள்ளார். ஆண்டையும் மாற்றிவிடப்  படக்குழுவிடம் பேசியிருக்கிறார்.

‘கர்ணன்’ எனப் படத்துக்குப் பெயர் வைத்ததில் துவங்கி படத்தில் பல மாற்றங்கள் மற்றும் சிக்கல்களைச் சந்தித்து வருகிறது. சமீபத்தில், பண்டாரத்தி எனும் பெயரை வைக்கக் கூடாது எனச் சர்ச்சைக் கிளம்ப, மஞ்சனத்தி எனப் பாடலை மாற்றியது படக்குழு. இப்போது, படம் வெளியான பிறகு, படத்தில் மாற்றங்கள் ஏற்பட இருக்கிறது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

புதிய ஐபிஎல் அணிகள்: சர்ச்சைப் பின்னணி!

7 நிமிட வாசிப்பு

புதிய ஐபிஎல் அணிகள்:  சர்ச்சைப் பின்னணி!

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

3 நிமிட வாசிப்பு

சமந்தாவுக்கு உதவும் ஷில்பா ஷெட்டி வழக்கின் தீர்ப்பு!

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்! ...

3 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை: இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்த பாகிஸ்தான்!

செவ்வாய் 13 ஏப் 2021