மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

இயக்குநருக்கு ஜோதிகா கொடுத்த இரண்டாம் வாய்ப்பு

இயக்குநருக்கு ஜோதிகா கொடுத்த இரண்டாம் வாய்ப்பு

திரையுலகிலிருந்து விலகிவிட்ட நடிக-நடிகைகள் மீண்டும் கம்பேக் கொடுப்பதெல்லாம் அத்திப் பூத்தாற் போல் நடக்கும். அப்படி, கம்பேக் கொடுத்து மீண்டும் விட்ட இடத்தைப் பிடிப்பதெல்லாம் மிகப்பெரிய சாதனை. அதை எளிதாக கையகப்படுத்தியவர் நடிகை ஜோதிகா.

36 வயதினிலே படத்தின் மூலமாக கம்பேக் கொடுத்த ஜோதிகா, நாயகி முக்கியத்துவம் கொண்ட படங்களாகத் தொடர்ந்து தேர்ந்தெடுத்து நடித்துவருகிறார். மகளிர் மட்டும் , நாச்சியார், செக்கச் சிவந்த வானம், காற்றின் மொழி, ராட்சசி, ஜாக்பாட், தம்பி மற்றும் பொன்மகள் வந்தாள் படங்கள் வெளியாகியுள்ளது. இந்த லிஸ்டில் எல்லாப் படங்களுமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இதில், கொரோனா லாக்டவுன் காரணமாக நேரடியாக பிரைம் வீடியோவில் வெளியாகி வரவேற்பை பெற்றது பொன்மகள் வந்தாள் திரைப்படம்.

தற்பொழுது, கத்துக்குட்டி பட இயக்குநர் சரவணன் இயக்கத்தில் பேமிலி டிராமா படமொன்றில் நடித்துமுடித்திருக்கிறார் நடிகை ஜோதிகா. இப்படத்தில் சசிகுமார், சமுத்திரகனி, சூரி, கலையரசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தைத் தொடர்ந்து, ஜோதிகாவின் அடுத்தப் படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. ஜோதிகாவின் கம்பேக்குக்குப் பிறகு, வெளியான அனைத்துப் படங்களுமே புது இயக்குநர்கள் தான். அதோடு, மீண்டும் அந்த இயக்குநருக்கு இரண்டாவது வாய்ப்பினை ஜோதிகா கொடுக்கவில்லை. இந்நிலையில், ஜோதிகா இரண்டாவது வாய்ப்பு ஒன்றை ராட்சசி பட இயக்குநருக்குக் கொடுக்க இருப்பதாக ஒரு தகவல்.

தலைமை ஆசிரியராக ஜோதிகா நடித்து தமிழகத்தின் கல்வியின் அவல நிலையை வெளிச்சம்போட்டுக் காட்டிய திரைப்படம் ராட்சசி. இந்தப் படத்துக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இப்படத்தை கெளதம் ராஜ் இயக்கியிருந்தார். இவரின் இயக்கத்தில் மீண்டும் நடிக்க ஜோதிகா சம்மதம் தெரிவித்திருக்கிறார். இந்த தகவலை இயக்குநரும் உறுதி செய்திருக்கிறார்.

தற்பொழுது யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன் நடிக்க ‘ வீரப்பனின் கஜானா’ எனும் படத்தை இயக்கி முடித்திருக்கிறார் கெளதம் ராஜ். அடுத்தக் கட்டமாக, ஜோதிகா நடிக்கும் படத்தை துவங்க இருக்காராம்.

- ஆதினி

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

3 நிமிட வாசிப்பு

சித்தார்த் விவகாரத்தில் நடிகை கஸ்தூரி கருத்து!

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

3 நிமிட வாசிப்பு

‘அழகி-2’: நடிகை நந்திதா தாஸின் ஆசை!

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

2 நிமிட வாசிப்பு

100 மில்லியன் பார்வைகளைக் கடந்த ‘டம் டம்’

செவ்வாய் 13 ஏப் 2021