மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

டாஸ்மாக் தடுப்பூசி: அப்டேட் குமாரு

டாஸ்மாக் தடுப்பூசி: அப்டேட் குமாரு

டாஸ்மாக்ல வேலை பாக்குறவங்களுக்கு தடுப்பூசி போடுறாங்களாம். எம்புட்டு அறிவு நம்ம அரசாங்கத்துக்கு. அப்படியே டாஸ்மாக் கடைக்கு சரக்கு வாங்க வர்றவங்களுக்கும் தடுப்பூசிய போட்டுவிட்டு, ‘தம்பி கொஞ்ச நாளைக்கு சரக்கடிக்காம இருங்க. அப்பதான் தடுப்பூசி வேலை செய்யும்’னு சொல்ற தைரியம் இவங்களுக்கு இருக்கா... அட என்னமோ போங்க!

நீங்க அப்டேட் பாருங்க

balebalu

தமிழகம் முழுவதும் கடந்த 4 நாள்களில் கொரோனா விதிமுறைகளை மீறியவர்களிடம் ரூ. 2.77 கோடி அபராதமாக வசூலிக்கப்பட்டது : போலீஸ் செய்தி -

போன மாதம் கட்சிகளிடம் இதேபோல் கெடுபிடி காட்டியிருந்தால் இன்னும் கோடிக்கணக்கில் வசூல் ஆகியிருக்கும்.

ச ப் பா ணி

PULL/PUSH க்கு அப்புறம் அதிக வித்தியாசம் தெரியாதது

நிபுணர் குழுவுக்கும், வல்லுநர் குழுவுக்கும் தான்

ரஹீம் கஸ்ஸாலி

கடல்களை பாதுகாக்க கடல் உணவு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்...!

- காஜல் அகர்வால்.

கடல் தண்ணீர் குறைவதை தடுக்க உப்பு சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்..!

- ரஹீம் கஸ்ஸாலி

நாகராஜ சோழன் MA.MLA

மங்களகரமான நாட்களில் பத்திரப்பதிவு செய்ய கூடுதல் கட்டணம் - தமிழக அரசு

மொதல்ல லஞ்சம் வாங்காம பத்திர பதிவு செய்ய சொல்லுங்க...

நாகராஜ சோழன் MA.MLA

மினிமம் பேலன்ஸ் இல்லாத வாடிக்கையாளர்களிடமிருந்து எஸ்பிஐ வங்கி ரூ.300 கோடி அபராதம் வசூல்!

500 , 1000 கூட இல்லாத அடித்தட்டு மக்கள் கிட்ட அபராதம் வசூல் பண்ணி கார்பரேட் காரண் கிட்ட குடுக்க வேண்டியது , அவன் நாமம் போட்டு விட்டுட்டு வெளிநாட்டுல போயி படுத்துக்க வேண்டியது...

மயக்குநன்

கொரோனாவைக் கட்டுப்படுத்த ஊரடங்கு தீர்வு ஆகாது!- அர்விந்த் கேஜ்ரிவால்.

பாவம் பார்த்து அதுவா நம்மை விட்டுப் போனாத்தான் உண்டுனு சொல்றீங்களா ஜீ..?!

balebalu

ஏண்ணே அவனை அடிக்குறீங்க ?

பின்னே என்ன ? மங்களகரமான நாள் ல எக்ஸாம் வெச்சா எல்லாருக்கும் எக்ஸ்ட்ரா மார்க் போட்டு பாஸ் போடுவாங்களான்னு கேக்குறாம்பா

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 ℝ𝕒𝕛𝕒

அன்று:

இந்திய தொலைக்காட்சிகளில் முதல்முறையாக...

இன்று:

வெள்ளித்திரைக்கு முன்பே சின்னத்திரையில்...

நாளை;

என்னமாறி வரும்னு தெரியல.

தர்மஅடி தர்மலிங்கம்

மழைக்கு கூட 'பள்ளிக்கூடம்' பக்கம் ஒதுங்காதவங்கெல்லாம் யாருன்னு நெனச்ச..?!

எலெக்சன்ல முதல் ஆளாக 'பள்ளிக்கூடம்' போய் ஓட்டு போட்டு வந்த நம்ம கிராமத்து மக்கள் தான்.

mohanram.ko

மனைவி கூட சமைத்த கணவனின் ஐடியாவாக தான் இருக்கும், 'குக் வித் கோமாளி' ஷோ

மயக்குநன்

இந்திய- சீன எல்லைப் பிரச்சினையில், 11-வது சுற்று பேச்சுவார்த்தையில் தீர்வு காண ஒப்புதல்!

பத்தோடு பதினொண்ணா ஆகாம இருந்தா சரி..!

சரவணன். ℳ

தேவையற்ற ரயில் பயணங்களைத் தவிர்த்திடுங்கள்" - தெற்கு ரயில்வே மதுரை கோட்டம்.

புரிஞ்சிடுச்சு... இல்லன்னா டிக்கெட் விலையை உயர்த்திடுவிங்க, அப்படித்தானே...?

கோழியின் கிறுக்கல்!!

நேரம் கிடைக்கிற போது பேசுபவர்களை விட,

நமக்காக நேரம் ஏற்படுத்தி பேசுபவர்கள் அதிக நெருக்கம் ஆகி விடுகிறார்கள்!!

-லாக் ஆஃப்

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

2 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் 5: சன் மகிழ்ச்சி விஜய் அதிர்ச்சி!

மெட்டி ஒலி உமா மகேஸ்வரி காலமானார்!

2 நிமிட வாசிப்பு

மெட்டி ஒலி  உமா மகேஸ்வரி காலமானார்!

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

5 நிமிட வாசிப்பு

டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது!

செவ்வாய் 13 ஏப் 2021