மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

மீண்டும் இணையும் தலைவி படக்குழு.. யாராக நடிக்கிறார் கங்கனா ?

மீண்டும் இணையும் தலைவி படக்குழு.. யாராக நடிக்கிறார் கங்கனா ?

அஜித் நடித்த கிரீடம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் ஏ.எல்.விஜய். விக்ரமுக்கு தெய்வத்திருமகள், விஜய்க்கு தலைவா, பிரபுதேவா நடிப்பில் தேவி, ஜெயம்ரவிக்கு வனமகன் என பெரிய நட்சத்திரங்களுக்கு கவனிக்கத்தக்கப் படங்களைக் கொடுத்தவர் இயக்குநர் விஜய். இவர் இயக்கத்தில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றுப் படமான தலைவி ரிலீஸூக்குத் தயாராகிவிட்டது.

ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத், எம்.ஜி.ஆர். ரோலில் அரவிந்த் சாமி நடித்திருக்கிறார்கள். சமுத்திரக்கனி, மதுபாலா உள்ளிட்டோரும் முக்கிய ரோலில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படமானது வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருக்கிறது.

இப்படம் வெளியாகாவிட்டாலும், அடுத்தப் படத்தின் பணிகளைத் துவங்கிவிட்டார் இயக்குநர் விஜய். இந்தமுறை வரலாற்றுக் காவியமொன்றை படமாக்க இருப்பதாகச் சொல்கிறார்கள். தமிழின் மாபெரும் இலக்கியங்களில் ஒன்றான சிலப்பதிகாரத்தை மையமாகக் கொண்டு படம் இயக்க இருக்காராம் விஜய்.

சிலப்பதிகாரத்தின் கண்ணகி கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு படமொன்றை இயக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கண்ணகியை படமாக்க காரணமே, தலைவி படத்தில் பணியாற்றிய விஜயேந்திர பிரசாத்.

பாகுபலி எனும் பிரம்மாண்ட படத்தின் திரைக்கதையாசிரியரும், ராஜமெளலியின் தந்தையுமான விஜயேந்திரபிரசாத் தான், தலைவி படத்திற்கும் கதை எழுதியுள்ளார். அவருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக, சிலப்பதிகாரத்தை படமாக்கலாம் என முடிவெடுத்திருக்கிறாராம் விஜய்.

கண்ணகி கதைக்குத் திரைக்கதை எழுத விஜயேந்திர பிரசாத்தை கேட்டிருக்கிறார் விஜய். அவரும் சம்மதம் சொல்லியதாகத் தெரிகிறது. அதோடு, கண்ணகியாக நடிக்க கங்கனாவும் சம்மதம் சொல்லியிருக்கிறாரம். அதனால், இந்தப் படத்திற்கான பணிகளில் மும்மரமாக இருக்கிறார் விஜய்.

தலைவி வெளியாகும் முன்பே இந்தப் படத்தின் அறிவிப்பு வெளியானால் நன்றாக இருக்காதென படக்குழு மெளனம் காக்கிறதாம். தலைவி ரிலீஸ் உறுதியானதும் கண்ணகி அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

5 நிமிட வாசிப்பு

சிவகார்த்திகேயன் எதிர்பார்க்காத டாக்டர் வசூல்!

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

செவ்வாய் 13 ஏப் 2021