மின்னம்பலம் மின்னம்பலம்

செவ்வாய் 13 ஏப் 2021

ஃபகத் ஃபாசில் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

ஃபகத் ஃபாசில் குறித்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!

மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடித்துவரும் நடிகர் ஃபகத் ஃபாசில். தமிழில் சிவகார்த்திகேயனுடன் ‘வேலைக்காரன்’ படத்தில் வில்லனாக நடித்து அறிமுகமானார். பிறகு, தியாகராஜா குமாரராஜாவின் சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடித்தார். தற்பொழுது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக ‘விக்ரம்’ படத்தில் நடிக்க இருக்கிறார்.

தெலுங்கில் அல்லுஅர்ஜூன் நடித்துவரும் புஷ்பா படத்திலும் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார் ஃபகத். மற்ற மொழிகளில் காட்டும் ஆர்வத்தை இரண்டுமடங்காக மலையாள படங்கள் நடிப்பதிலும் காட்டிவருகிறார்.

கொரோனா லாக்டவுனில் படப்பிடிப்புக்குச் செல்லவே பலரும் தயக்கம் காட்டிவந்த சூழலில் கொரோனாக் காலத்தில் மட்டும் நான்கு படங்களை ரிலீஸ் செய்துவிட்டார் ஃபகத்.

கொரோனா தீவிரமாக இருந்த சென்ற வருடம், ட்ரான்ஸ் மற்றும் C U SOON படங்கள் வெளியானது. இந்த வருடம் நெட்ஃப்ளிக்ஸில் இருள் மற்றும் பிரைம் வீடியோவில் ஜோஜி படங்கள் வெளியாகியுள்ளது. இந்த நான்கு படங்களுமே நல்ல ஹிட். மேலும், நான்குமே ஓடிடி தளத்தில் வெளியான படங்கள்.

திரையரங்கை தவிர்த்துவிட்டு டிஜிட்டல் தளத்தில் ஃபகத் ஃபாசில் படத்தை ரிலீஸ் செய்து வருவதால் திரையரங்க உரிமையாளர்கள் மத்தியில் பெரும் அதிருப்தி நிலவிவருகிறது. தொடர்ந்து, கேரளத்தின் திரைத்துறை சார்ந்த அமைப்பு ஒன்று புகாரொன்று கொடுத்துள்ளதாகச் சொல்லப்பட்டது. அதன்படி, ஃபகத்தின் படங்களை திரையரங்கில் வெளியிட தடை விதிக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் பரவின. இச்செய்தியை கேரள ஊடகங்களும் பதிவிட்டதால் பெரும் பரபரப்பு நிலவியது.

இந்நிலையில், ஃபகத் மீதான சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது. கேரள ஃபிலிம் சேம்பரானது ஃபகத்தின் படங்களைத் திரையரங்கில் வெளியிட எந்த தடையும் விதிக்கவில்லை. ஊடகங்களில் சொல்லப்படும் செய்திகள் அனைத்தும் வதந்தியே என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஓடிடி ரிலீஸ் குறித்து திரையரங்கத்தினருடன் ஃபகத் பேசி சுமூக முடிவை எட்டிவிட்டதாகவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து, ஃபகத் ஃபாசில் நடிப்பில் அடுத்து ரிலீஸாக இருக்கும் மாலிக் திரைப்படம் நேரடியாக திரையரங்கில் வருகிற மே 13ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இதில் எந்த சிக்கலும் இல்லையென்பதையும் தெளிவுபடுத்தியுள்ளனர்.

- தீரன்

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

4 நிமிட வாசிப்பு

அரண்மனை 3 படத்தை வாங்கிய உதயநிதி

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

2 நிமிட வாசிப்பு

ரூ.10 கோடியில் நடிகர் சங்கத்துக்கு கட்டிடம்: பிரகாஷ் ராஜ்

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

3 நிமிட வாசிப்பு

ஆட்டிசம் பாதித்த பெண்ணாக ஐஸ்வர்யா ராஜேஷ்

செவ்வாய் 13 ஏப் 2021