மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

ரஜினி, அஜீத், நயன்தாரா வராதபோது நான் ஏன் வர வேண்டும்?: த்ரிஷா

ரஜினி, அஜீத், நயன்தாரா வராதபோது நான் ஏன் வர வேண்டும்?: த்ரிஷா

த்ரிஷாவின் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘பரமபதம் விளையாட்டு’. இந்த படத்துக்குச் செலவு செய்த அளவுக்கு வியாபாரமாகவில்லை. இந்தப் படத்தை வெளியிடப் பலமுறை தேதிகள் நிச்சயித்தும் முடியாமல் முடங்கிப்போனது. திரையரங்க வெளியீடு சாத்தியமில்லை என்பதால் ஓடிடி தளத்தில் பரமபதத்தை வெளியிட முயற்சி மேற்கொள்ளப்பட்டு வியாபார ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

படத்தை புரோமோஷன் செய்வதற்காகத் தயாரிப்பு நிறுவனம் சார்பில் என்ன செய்துதர வேண்டும் என்பதை ஒப்புக்கொண்ட பின்னரே வியாபாரம் முடிவுக்கு வரும். அந்த அடிப்படையில் பரமபதம் வெளியிடுவதற்கு முன்பாக படத்தில் நடித்த நடிகர், நடிகைகள் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பங்கேற்பது, படம் பற்றி தொலைக்காட்சிகளுக்குப் பேட்டி கொடுப்பது போன்ற நிகழ்ச்சிகள் நடக்க வேண்டும்.

இந்தப் படத்தின் கதாநாயகி த்ரிஷா படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கு வர வேண்டும், முழுமையான ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்பது படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்ததில் இடம்பெற்றுள்ளது. இதைச் சுட்டிக்காட்டி த்ரிஷாவுக்குத் தயாரிப்பாளர் தரப்பிலிருந்து அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் சாக்குப்போக்கு காட்டிய த்ரிஷா வருவதற்கான உத்தரவாதமான தேதியை உறுதி செய்யவில்லை.

இதனால் தயாரிப்பாளர் தான் உறுப்பினராக இருக்கும் தயாரிப்பாளர் சங்கத்தின் உதவியை நாடினார். தயாரிப்பாளர்கள் சங்கத்திலிருந்து சங்க நிர்வாகிகள் இது குறித்து த்ரிஷாவிடம் பேசியபோது, 'ரஜினி, அஜீத், நயன்தாராவெல்லாம் அவர்கள் நடித்த, எந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு, புரொமோஷன் நிகழ்ச்சிகளுக்கும் வருவதில்லை. இதுவரை எப்போதாவது அவர்களைக் கேள்வி கேட்டிருக்கிறீர்களா, நடவடிக்கை எடுத்திருக்கிறீர்களா? அப்புறம் ஏன் என்னை மட்டும் கேக்குறீங்க?' என்று குரலை உயர்த்தியிருக்கிறார் த்ரிஷா.

'பரமபதம் படத்தின் ஒப்பந்தத்தில் கையெழுத்துப் போட்டிருக்கிறீர்களே...' என்று நிர்வாகிகள் திருப்பிக் கேட்டதற்கு... 'இந்தப் பட புரொமோஷனுக்கு நான் வர மாட்டேன்னா வர மாட்டேன்' என்றவர் எதிர்முனையின் பதிலுக்கு வாய்ப்பு கொடுக்காமல் தொலைபேசி இணைப்பைத் துண்டித்திருக்கிறார்

இதையடுத்து த்ரிஷா நடிக்கும் படத்திற்கு ஒத்துழைப்பு அளிப்பதில்லை என்று சொல்லி மறைமுகமாக த்ரிஷா நடிக்கும் புதிய படங்களுக்கு தடை விதிக்கலாமா என்கிற ஆலோசனை தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகிகள் மட்டத்தில் நடைபெறத் தொடங்கியுள்ளது.

-இராமானுஜம்

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

திங்கள் 12 ஏப் 2021