மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!

ஐபிஎல்: ஹைதராபாத்தை வீழ்த்திய கொல்கத்தா நைட்ரைடர்ஸ்!

சென்னையில் நேற்று (ஏப்ரல் 11) இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றுள்ளது.

கொரோனா பரவலுக்கு இடையில் ரசிகர்கள் இல்லாத மைதானத்தில் 14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நேற்றிரவு நடைபெற்ற 3ஆவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் ஹைதராபாத் - கொல்கத்தா அணிகள் மோதின.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். இதன்படி கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது.

கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் குவித்தது. கொல்கத்தா அணியில் அதிகபட்சமாக நிதிஷ் ராணா 56 பந்துகளில் 85 ரன்கள் அடித்தார். பந்து வீச்சைப் பொறுத்தவரை ரஷித் கான், முகம்மது நபி தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

இதையடுத்து 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஹைதராபாத் அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் முதலாவதாகக் களமிறங்கினர். இதில் வார்னர் 3 ரன்னிலும், சகா 7 ரன்னிலும் வெளியேற, அவர்களைத்தொடர்ந்து களமிறங்கிய மணிஷ் பாண்டே மற்றும் ஜானி பேர்ஸ்டோவ் ஆகியோர் இணை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம்கடந்தனர்.

இந்த ஜோடியில் பேர்ஸ்டோவ் 55 ரன்களும், அவரைத் தொடர்ந்து நபி 14 ரன்களும், விஜய் சங்கர் 11 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இறுதியில் மணிஷ் பாண்டே 61 (44) ரன்களும், அப்துல் சமது 19 (8) ரன்களும் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

முடிவில் ஹைதராபாத் அணி 20 ஒவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் மட்டுமே எடுத்தது.

கொல்கத்தா அணியின் சார்பில் அதிகபட்சமாக பிரசித் கிருஷ்ணா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன்மூலம் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 10 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

இன்று (ஏப்ரல் 12) இரவு 7.30 மணிக்கு மும்பையில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.

-ராஜ்

.

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

3 நிமிட வாசிப்பு

ஷாருக்கான் மகனால் பாதிக்கப்பட்ட கலைஞர்கள்!

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி மம்மூட்டி உருக்கம்!

6 நிமிட வாசிப்பு

என் தகப்பன்: நெடுமுடி வேணு பற்றி  மம்மூட்டி உருக்கம்!

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார் ...

3 நிமிட வாசிப்பு

நாகேஷுக்கும் வாலிக்கும் உதவியவர்: ஸ்ரீகாந்த் பற்றி சிவகுமார்

திங்கள் 12 ஏப் 2021