மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

அன்று அலை கடலென வா... இன்று அத்தியாவசியத்துக்கு மட்டும் வா: அப்டேட் குமாரு

அன்று அலை கடலென வா... இன்று அத்தியாவசியத்துக்கு மட்டும் வா: அப்டேட் குமாரு

அத்தியாவசியமா தேவை இருந்தா மட்டுமே வெளிய வரணும்னு இன்னிக்கு முதல்வர் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்திருக்காரு. ஏப்ரல் 6 ஆம் தேதிக்கு முன்னாடி எல்லாரும் வாங்க எல்லாரும் வாங்கனு கூட்டத்தைக் கூட்டி தமிழ்நாடு பூராவும் இவர் உட்பட எல்லா அரசியல்வாதிகளும் சுத்தினாங்க. . அதாவது அவங்களுக்கு தேவைன்னா அலைகடலென வெளிய வரணும். இப்ப அத்தியாவசிய தேவைன்னா மட்டும் வெளிய வரணும். என்ன சார் உங்க சட்டம், என்ன சார் உங்க சட்டம். தும்பை விட்டுட்டு வாலை பிடிக்கிறீங்களே சார்.

நீங்க அப்டேட் பாருங்க

amudu

எமோஜிகள் மட்டும் இல்லையென்றால், நமக்கு வந்த பல மெசேஜ்களுக்கு, பதில் அனுப்பாமலே இருந்திருப்போம்.

balebalu

ஃபர்ஸ்ட் டோஸ் முடிச்சாச்சு ! இனிமே செகண்ட் டோஸ் தான் பாக்கி !

வாக்சின் ஆ மாப்ள ?

நான் காப்பியை சொன்னேன் மாமா

தர்மஅடி தர்மலிங்கம்

மழைக்கு கூட 'பள்ளிக்கூடம்' பக்கம் ஒதுங்காதவங்கெல்லாம் யாருன்னு நெனச்ச..?!

எலெக்சன்ல முதல் ஆளாக 'பள்ளிக்கூடம்' போய் ஓட்டு போட்டு வந்த நம்ம கிராமத்து மக்கள் தான்.

மயக்குநன்

தேர்தல் முடிவுகளில் நல்ல தீர்ப்பு நிச்சயம் வரும்!- மு.க.ஸ்டாலின்.

கொரோனா நேரமா இருக்கிறதால 'ஆல்பாஸ்' கிடைக்கணும்னு வேண்டிக்கிட்டு இருக்கீங்களோ தலைவரே..?

நாகராஜ சோழன் MA.MLA

”நாட்டு மக்களுக்கு முதலில் தடுப்பூசி, பின்னரே ஏற்றுமதி பற்றி அரசு சிந்திக்கவேண்டும்” -சோனியா காந்தி.

இருக்கு...இருக்கு... இந்தியாவின் எதிர்கட்சி உயிரோட தான் இருக்கு...

balebalu

ஏண்ணே அவனை அடிக்கிறீங்க ?

பின்ன என்ன ? 'தடுப்பூசி திருவிழா' ன்னு சொல்லுறாங்களே ? ஊசி போட்டா பலூன் , ஜவ்வு மிட்டாய் லாம் கொடுப்பாங்களா ன்னு கேக்குறாம்ப்பா

ℍ𝕒𝕣𝕚𝕥𝕙𝕣𝕒𝕟𝕒𝕕𝕙𝕚 ℝ𝕒𝕛𝕒

வெயிலால வேர்க்குறதை விட ஏஸியால வர்ற கரண்ட் பில்லை நினைச்சாதான் இன்னும் அதிகமா வேர்க்குது.

கோடை

தர்மஅடி தர்மலிங்கம்

“கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏதும் இல்லை!” – ஹர்ஷ் வர்தன்!

கொரோனா பரவலுக்கும் தான் .தட்டுப்பாடு இல்லைங்களே.

PrabuG

பரப்புரை பரப்புரைன்னு சொன்னாங்க. அதெல்லாம் கொரோனா பரப்பும் உரைன்னு அப்போப் புரியலை, இப்போப் புரியுது...

மயக்குநன்

50 சதவீத இருக்கைகளுடன் டாஸ்மாக் பார்கள் இயங்கும்!- அரசு அறிவிப்பு.

குடிச்ச பிறகு எல்லாமே ரெண்டு ரெண்டா தெரியும்போது 100 சதவீதமா மாறிடுமே பாஸ்..!

துயிலன்

தேர்தல் பொதுக் கூட்டங்களால் தான் கொரோனா பரவல் அதிகரித்தது - கிருஷ்ணசாமி

மகாராஷ்டிராவுல தேர்தலே நடக்கலயே மேன்.

-லாக் ஆஃப்

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

திங்கள் 12 ஏப் 2021