மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

புதிய இயக்குநருக்கு வாய்ப்பு : தனுஷின் தைரிய முடிவு!

புதிய இயக்குநருக்கு வாய்ப்பு : தனுஷின் தைரிய முடிவு!

முதல் படத்தில் கவனம் ஈர்க்கும் இளம் தலைமுறை இயக்குநர்களை உடனடியாக அழைத்து வாய்ப்பு கொடுக்கும் இயல்பு தனுஷூக்கு உண்டு. அப்படித்தான், பரியேறும் பெருமாள் பார்த்துவிட்டு மாரி செல்வராஜை அழைத்தார். பிறகு, கர்ணன் திரைப்படம் உருவானது. அதுபோல, ராட்சசன் இயக்குநர் ராம்குமாருக்கும் தனுஷை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. அப்படி, இன்னொரு இயக்குநருக்கும் வாய்ப்பு கொடுக்க இருக்கிறார் தனுஷ்.

தமிழ் மட்டுமின்றி இந்தி, ஹாலிவுட் படங்கள் என செம பிஸியாக இருக்கிறார் தனுஷ். அவருக்கு, மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 09-ஆம் தேதி வெளியான கர்ணன் மிகப்பெரிய பாராட்டையும் வரவேற்பையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது. தற்பொழுது, ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் க்ரே மேன் எனும் ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் தனுஷ். இந்தப் படத்தை முடித்துவிட்டு, கார்த்திக் நரேன் இயக்கத்தில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருக்கிறார். தனுஷின் 43வது படமிது.

இப்படத்தைத் தொடர்ந்து, செல்வராகவன் இயக்கத்தில் நானே வருவேன் படம் உருவாக இருக்கிறது. கர்ணன் படத்தைத் தொடர்ந்து தாணு இந்தப் படத்தை தயாரிக்கிறார். அதோடு வெற்றிமாறன் இயக்கத்திலும், ராம்குமார் இயக்கத்திலும் தனுஷ் நடிக்கும் படங்களும் லைன் அப்பில் இருக்கிறது.

இந்த வரிசையில் தனுஷின் 47-வது படத்தை இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்க இருப்பதாக புது தகவல் கசிந்துள்ளது. தரமணி படத்தில் நடித்த வசந்த் ரவி & பாரதிராஜா நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ராக்கி. இந்தப் படத்தின் இயக்குநர் தான் அருண் மாதேஸ்வரன். இப்படம் வெளியாகாவிட்டாலும், படத்துக்கு திரையுலகில் பாசிட்டிவ் ரெஸ்பான்ஸ் நிலவி வருகிறது. இந்த இயக்குநர் தற்பொழுது செல்வராகவன், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ எனும் படத்தை இயக்கிவருகிறார்.

அருண் மாதேஸ்வரனின் மேக்கிங் ஸ்டைல், ஸ்கிரிப்ட் குறித்து கேட்டறிந்த தனுஷ், இவருக்கு அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்திருப்பதாகச் சொல்கிறார்கள். சமீபத்தில் தனுஷூக்கு ஒரு கதையொன்றையும் அருண் சொன்னதாகத் தெரிகிறது. அந்தக் கதை பிடித்துப் போகவே உடனடியாக தனுஷ் ஓகே சொல்லியிருக்கிறாராம். கார்த்திக் நரேனின் தனுஷ் 43 படத்தை தயாரிக்கும் சத்ய ஜோதி பிலிம்ஸ் தான், அருண்மாதேஸ்வரன் இயக்கும் படத்தையும் தயாரிக்க இருக்காம்.

கர்ணனைத் தொடர்ந்து இந்த வருடம் தனுஷூக்கு கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் ‘ஜெகமே தந்திரம்’ மற்றும் பாலிவுட்டில் அக்‌ஷய்குமாருடன் ‘அட்ராங்கி ரே’ படங்கள் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

-தீரன்

.

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

2 நிமிட வாசிப்பு

என்னை கைது செய்ய வந்தால்...: கங்கனா

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

2 நிமிட வாசிப்பு

ஐந்து உணர்வுகள்: ஞான ராஜசேகரன் ஆதங்கம்!

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

10 நிமிட வாசிப்பு

மாநாடு ரிலீஸ் ஆனது எப்படி?

திங்கள் 12 ஏப் 2021