மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

‘தலைவர் வேற லெவல் எனர்ஜி’: சூரி சொன்ன அப்டேட் !

‘தலைவர் வேற லெவல் எனர்ஜி’: சூரி சொன்ன அப்டேட் !

ரஜினி நடிப்பில் சிவா இயக்கத்தில் பரபரப்பான படப்பிடிப்புடன் உருவாகிவரும் திரைப்படம் அண்ணாத்த. இந்தப் படம் குறித்த இரண்டு விஷயங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித்துக்கு வீரம், விவேகம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என நான்கு பெரிய ஹிட்களைக் கொடுத்தவர் இயக்குநர் சிவா. விஸ்வாசம் படம் வெளியான பிறகு, சிவாவின் அடுத்த பட நாயகன் யாரென பெரும் எதிர்பார்ப்பு இருந்த போது, ரஜினியை இயக்குவதாக தகவல் வெளியானது. அதுவே ரசிகர்களுக்குப் பெரிய சர்ப்ரைஸ்.

சன்பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சிவா இயக்கத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, நயன்தாரா , கீர்த்தி சுரேஷ், பிரகாஷ் ராஜ், ஜெகபதி பாபு, சூரி, சதீஷ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கிறார்கள். தேசிய விருது இசையமைப்பாளர் இமான் படத்தின் இசைக்கோர்ப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறார். படத்துக்கு, சிவாவின் ஆஸ்தான வெற்றி ஒளிப்பதிவாளராக பணியாற்றிவருகிறார்.

கொரோனாவுக்கு முன்பே 60% படப்பிடிப்பை முடித்திருந்தது படக்குழு. கொரோனாவுக்கு பிறகு படப்பிடிப்பை நடத்துவதில் ஏகப்பட்ட போராட்டம். கடந்த டிம்பர் மாதத்தில் மீதிப் படப்பிடிப்பை முடித்துவிட களத்தில் இறங்கியது. அதற்குள் படப்பிடிப்பு தளத்தில் கொரோனா பரவ, ஷூட்டிங் நின்றது. அதன்பிறகு, தற்பொழுது விறுவிறுப்புடன் படப்பிடிப்பு நடந்துவருகிறது. சென்னையில் படப்பிடிப்பை நடத்திவந்த படக்குழு தற்பொழுது, ஹைதராபாத்தில் முகாமிட்டுள்ளது. படத்துக்கான முக்கியமான பல காட்சிகளை அங்கு படமாக்கி வருகிறார்களாம்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் சிவாவுடன் ரஜினிகாந்த் பேசிக் கொண்டிருப்பது போன்ற புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளது தயாரிப்பு தரப்பு. இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. சில தினங்களுக்கு முன்பு, விஜய் 65 படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் துவங்கிவிட்டதை விஜய்யுடன் இயக்குநர் நெல்சன் இருக்கும் புகைப்படத்தை இதே போல வெளியிட்டு சூடு கிளப்பியது தயாரிப்பு தரப்பான சன்பிக்சர்ஸ்.

ரஜினியின் புகைப்படம் ஒருபக்கம் வைரலாக, இன்னொரு சம்பவமும் ட்விட்டரில் நடந்தது. காமெடி நடிகர் சூரியிடம் ‘அண்ணாத்த பட அப்டேட்’ சொல்லுமாறு ரசிகர் ஒருவர் கேட்க, அதற்கு சூரியும் “ தலைவர் ஷூட்டிங் ஸ்பாட்டில் கலக்குறாரு. வேற லெவல் எனர்ஜி" என தெரிவித்தார். சூரியின் இந்த ட்விட்டை இணையத்தில் டிரெண்ட் செய்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள். அண்ணாத்த திரைப்படம் வருகிற தீபாவளி பண்டிகைக்கு திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

- ஆதினி

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 12 ஏப் 2021