மின்னம்பலம் மின்னம்பலம்

திங்கள் 12 ஏப் 2021

சூப்பர் ஸ்டார் ஆகும் சிம்பு.. இதென்ன வம்பா போச்சு !

சூப்பர் ஸ்டார் ஆகும் சிம்பு.. இதென்ன வம்பா போச்சு !

இந்த ஆண்டுக்கான பிஸியான நடிகர்களில் ஒருவர் நடிகர் சிம்பு. இந்த வருடத்தின் முதல் படமாக சுசீந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் ‘ஈஸ்வரன்’ வெளியானது. தற்பொழுது வெங்கட்பிரபு இயக்கத்தில் சுரேஷ் கமாட்சி தயாரிப்பில் ‘மாநாடு’ படத்தில் கவனம் செலுத்திவருகிறார். இந்தப் படமும் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. மாநாடு படத்துக்கான ஃபைனல் ஷெட்யூல் ஷூட்டிங் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு உருவாகிவருகிறது.

இந்நிலையில், மாநாடு முடித்துவிட்டு உடனடியாக பத்து தல படத்தில் கலந்துகொள்கிறார். ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் இப்படம் உருவாக இருக்கிறது. கன்னடத்தில் வெளியான முஃப்டி படத்தின் தமிழ் ரீமேக் அது.

பத்து தல படத்துக்கு நடுவே இன்னொரு படத்தையும் கூடவே துவங்குகிறார் . ஐசரி கணேஷ் தயாரிப்பில் கெளதம்மேனன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் ‘நதிகளில் நீராடும் சூரியன்’ படம் தான் அது. ரசிகர்கள் விடிவி 2 படத்தை எதிர்பார்த்துக் கொண்டிருந்த போது, இந்தப் படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இயக்குநர் ராம், மிஷ்கின் மற்றும் சுசீந்திரனிடம் கதை கேட்டு வைத்திருந்தாலும், சிம்புவின் பட வரிசையில் புதிதாக ஒரு படமும் இணைந்திருக்கிறது. நதிகளில் நீராடும் சூரியன் படத்தைத் தொடர்ந்து, மீண்டும் கெளதம் மேனனுக்கு ஒரு படம் நடிக்க இருக்காராம் சிம்பு. அந்தப் படத்தையும் ஐசரி கணேஷ் தயாரிக்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. அதோடு, இப்படத்துக்கு ‘சூப்பர் ஸ்டார்’ என டைட்டிலும் உறுதி செய்திருப்பதாக ஒரு தகவல்.

சிம்பு எப்போதுமே தன்னை லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று கூறிக்கொள்வார். இப்போது, சூப்பர் ஸ்டார் என படத்தின் பெயரையும் உறுதி செய்திருக்கிறார். விரைவில் படத்தின் அறிவிப்பு குறித்து எதிர்பார்க்கலாம்.

கெளதம் - சிம்பு காம்போவில் விண்ணைத் தாண்டி வருவாயா மற்றும் அச்சம் என்பது மடமையடா படங்கள் வெளியாகி பெரியளவில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

திங்கள் 12 ஏப் 2021