மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

அந்தாதூன் ரீமேக் ; பிரசாந்துடன் நடிக்கும் பிரபல நடிகர்கள்!

அந்தாதூன் ரீமேக் ; பிரசாந்துடன் நடிக்கும் பிரபல நடிகர்கள்!

பாலிவுட் நடிகர் ஆயுஷ்மான் குர்ரானா நடிப்பில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்ற மூன்று இந்தி படங்கள் இப்போது, தமிழில் ரீமேக் ஆகிவருகிறது. அதாவது, ஆர்டிகிள் 15 திரைப்படத்தின் ரீமேக்கில் உதயநிதி நடிக்கிறார். பதாய்ஹோ பட ரீமேக்கில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இவ்விரு படங்களும் விரைவில் துவங்க இருக்கிறது, இந்த வரிசையில் மூன்றாவதாக அந்தாதூன் பட ரீமேக்கில் பிரசாந்த் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி பரபரப்பாக நடந்து வருகிறது.

அந்தாதூன் படமானது தமிழில் அந்தகன் எனும் பெயரில் உருவாகிவருகிறது. பிரசாந்தின் தந்தை தியாகராஜன் இயக்கத்தில் பிரசாந்த் நடிக்கிறார். இப்படத்தில் பார்வை சவால் கொண்ட ரோலில் நடிக்கிறார். முதல் கட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்தியில் தபு நடித்த ரோலில் தமிழில் சிம்ரன் நடிக்கிறார். ராதிகா ஆப்தே ரோலில் பிரியா ஆனந்த் நடிக்கிறார்.

சமீபத்தில் படத்தில் போலீஸ் கேரக்டரில் நடிக்க சமுத்திரகனி ஒப்பந்தமாகியிருப்பதை படக்குழு அறிவித்தது. இந்நிலையில், படத்தில் தபுவின் பக்கத்து வீட்டு வயதான லேடி ரோலில் மோகினி கேவல்ரமணி நடித்திருந்தார். இந்த ரோலில் தமிழ் வெர்ஷனில் நடிகை லீலா சாம்சன் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ஓ காதல் கண்மனி படத்தில் அல்சைமர் கொண்ட ரோலில் நடித்து தமிழில் அறிமுகமானார் லீலா. அதன்பிறகு, சில்லுக்கருப்பட்டியில் ரொமாண்டிக்கில் அசத்தினார். அதைத்தொடர்ந்து, பிரைம் வீடியோவில் வெளியான ‘புத்தம்புது காலை’ வெப்சீரிஸிலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தகன் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் படு வேகமாக நடந்துவருகிறது. மீண்டும் லாக்டவுன் அச்சம் இருப்பதால் விரைவில் முடித்துவிட திட்டமாம்.

- ஆதினி

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

2 நிமிட வாசிப்பு

அஜித்குமார் கேட்ட ஆலோசனை!

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

4 நிமிட வாசிப்பு

வெற்றியை பதிவு செய்த கோடியில் ஒருவன்!

பிக்பாஸ் ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

5 நிமிட வாசிப்பு

பிக்பாஸ்  ஒளிபரப்பு தேதிகள் அறிவிப்பு!

ஞாயிறு 11 ஏப் 2021