மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

நேரடியாக டிவியில் இன்று ரிலீஸாகும் புதுப்படம்

நேரடியாக டிவியில் இன்று ரிலீஸாகும் புதுப்படம்

திரையரங்குகள், ஓடிடி மட்டுமின்றி நேரடியாக தொலைக்காட்சியிலும் புதிய திரைப்படங்கள் தொடர்ச்சியாக வெளியாகி வருகிறது. குறிப்பாக, சின்ன பட்ஜெட் படங்களுக்கு திரையரங்கை விட டிவி ரிலீஸானது பெஸ்ட் சாய்ஸ். ஏனெனில், கொரோனா காலக் கட்டத்தில் இருக்கிறோம். ஒரு சின்ன பட்ஜெட் படத்தை திரையரங்கில் வெளியிட்டு, ரசிகர்களின் கவனம் பெறவில்லையென்றால் போட்ட பணத்தை எடுப்பதே சவாலாகிவிடும். ஆனால், டிவியில் என்றால் எதிர்பார்க்கும் தொகைக்கு தயாரிப்பாளர் விற்பனை செய்துவிடலாம்.

கொரோனா அச்சுறுத்தலுக்குப் பிறகு, நேரடியாக டிவியில் வெளியான முதல் புதுப்படம் ‘நாங்க ரொம்ப பிஸி’. பத்ரி இயக்கத்தில் பிரசன்னா, அஸ்வின், ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் நகைச்சுவைத் திரைப்படமாக உருவானது. இயக்குனர் சுந்தர்.சி-யின் அவினி சினிமேக்ஸ் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரித்து, சன் தொலைக்காட்சியில் நேரடியாக 2020-ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளியானது. இப்படம், 2016ல் கன்னட மொழியில் வெளியான மாயாபஜார் படத்தின் தமிழ் ரீமேக்.

தொடர்ந்து, கடந்த பொங்கல் பண்டிகைக்கு விக்ரம் பிரபு, லட்சுமி மேனன் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் ' புலிக்குத்தி பாண்டி' படம் சன் டிவியில் நேரடியாக வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது.

அதுபோல, சில்லுக்கருப்பட்டி படத்தை இயக்கிய ஹலீதா ஷமீம் இயக்கத்தில் உருவான படம் ஏலே. இப்படம் நேரடியாக விஜய் டிவியில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. சமுத்திரகனி மற்றும் மணிகண்டன் நடிப்பில் தந்தை மகன் பாசத்தை மையமாகக் கொண்ட நாஸ்டாலஜிக் நினைவுகளோடு படம் இருந்தது. கடந்த பிப்ரவரி 12ஆம் தேதி இப்படம் வெளியானது.

ஏலே படமானது திரையரங்கிற்கென திட்டமாகி, ரிலீஸ் தேதி வரை உறுதியுமாகி திரையரங்கத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் நேரடியாக டிவியில் வெளியானது. அதுபோல, திரையரங்குக்கு என தயாராகி நேரடியாக டிவிக்கு மற்றுமொரு புதுப்படமும் வந்திருக்கிறது.

பிரபாகரன் இயக்கத்தில் கதிர், சூரி, ரகசியா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சர்பத்’. சூப்பர் சிங்கர் அஜீஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார். 7 ஸ்கிரீன் நிறுவனத்துடன் வயகாம் 18 ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்திருக்கிறது. நீண்ட நாளாக தயாரிப்புப் பணியில் இருந்த இப்படத்துக்கு ஒரு விடிவு காலம் வந்துவிட்டது. இப்படம், நேரடியாக கலர்ஸ் டிவியில் இன்று ஒளிபரப்பாகிறது. ஞாயிறு என்றாலே கே.ஜி.எஃப் படத்தைப் போட்டு டரியலாக்கும் கலர்ஸ் டிவியில் இன்று மாலை 4.00 மணிக்கும் இரவு 7.00 மணிக்கும் சர்பத் திரைப்படம் ப்ரத்யோகமாக ஒளிபரப்பாகிறது.

- ஆதினி

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

3 நிமிட வாசிப்பு

ரெட்டை ஜடையில் அமலா பால்: வைரலாகும் புகைப்படம்!

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

3 நிமிட வாசிப்பு

ஆஸ்கார் தகுதிப்பட்டியலில் ஜெய்பீம்!

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு! ...

4 நிமிட வாசிப்பு

சுசிகணேசன் வழக்கு: சின்மயி - லீனா மணிமேகலைக்கு எதிராக தீர்ப்பு!

ஞாயிறு 11 ஏப் 2021