மின்னம்பலம் மின்னம்பலம்

ஞாயிறு 11 ஏப் 2021

ஆர்ட்டிகிள் 15 ; ரசிகர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவாரா உதயநிதி

ஆர்ட்டிகிள் 15 ; ரசிகர்கள் விருப்பத்தை நிறைவேற்றுவாரா உதயநிதி

கமர்ஷியல் மசாலா படங்களுக்கு நடுவே, சிறந்த கதையம்சம் கொண்ட திரைப் படைப்புகளின் மீது அதிக நாட்டம் செலுத்த துவங்கியிருக்கிறது தமிழ் சினிமா. அதனால், மற்ற மொழிகளில் வெற்றி பெற்ற படங்களும் தமிழில் ரீமேக் ஆகிவருகிறது. மலையாளத்திலிருந்து ஆண்டாய்டு குஞ்சப்பன் , தி கிரேட் இந்தியன் கிச்சன் படங்கள் போல இந்தியிலிருந்து அந்தாதூன், பதாய் ஹோ மற்றும் ஆர்ட்டிகிள் 15 படங்களும் தமிழுக்கு வருகின்றன.

இந்த லிஸ்டில் மிக முக்கிய திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. பாலிவுட்டில் கடந்த 2019ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஆர்ட்டிகிள் 15. ஆயுஷ்மான் குரானா லீட் ரோலில் நடித்திருந்தார். இப்படத்தை அனுபவ் சிம்ஹா இயக்கியிருந்தார். இந்தி சினிமாவில் திரையானதை விட, நெட்ப்ளிக்ஸில் வந்ததும் உலகமெங்கும் வரவேற்பைப் பெற்றது.

தயாரிப்பாளர் போனி கபூர் இப்படத்தை தமிழில் ரீமேக் செய்ய முடிவெடுத்தார். அதன்படி, பாடலாசிரியரும், இயக்குநருமான அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் உதயநிதி நடிப்பில் இப்படம் உருவாக இருப்பது உறுதியானது. தேர்தல் பரபரப்பினால் இப்படம் துவங்கவில்லை. இந்நிலையில், முதல் கட்டமாக இப்படத்தை கையில் எடுத்திருக்கும் உதயநிதி படத்தின் படப்பிடிப்பை துவங்க இருக்காராம். தொடர்ச்சியாக 20 நாட்கள் இப்படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு நடக்க இருக்காம். இப்படம் எடுக்கப் பட வேண்டிய கிராமம் உள்ளிட்ட அனைத்தும் உறுதி செய்யப்பட்டு விட்டதாம். படப்பிடிப்பு உடனடியாக துவங்குகிறது.

ஆர்ட்டிகிள் 15 படத்தின் கதை இதுதான். காவல்துறையின் உயர் பதவியில் இருக்கும் போலீஸ் அதிகாரி ஒருவர், சாதிய ஒடுக்குமுறைகள் நிறைந்திருக்கும் கிராமத்துக்குப் பணி மாற்றலாகச் செல்கிறார். அவர் சந்திக்கும் பிரச்னைகள், நடக்கும் சம்பவங்கள், அரசியலமைப்புச் சட்டத்தில் ‘ஆர்ட்டிகிள் 15’ என்றால் என்ன என்பதே படத்தின் களம்.

மிஷ்கின் இயக்கத்தில் சைக்கோ படத்தில் பார்வை சவால் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார் உதயநிதி. அதனால், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு நிலவுகிறது. பிற மொழிகளில் ஹிட் கொடுத்த பல பர்னிச்சர்களை, தமிழ் சினிமா உடைத்திருக்கிறது. படத்தின் நேட்டிவிட்டி, ஆன்மா சிதையாமல் மற்ற மொழிகளில் உருவானால் மட்டுமே படம் ஹிட்டாகும். அதற்குள் கர்ஷியலைத் தூவி பல படங்களை தமிழ் நடிகர்கள் சிதைத்திருக்கிறார்கள். அப்படி எதுவும், இல்லாமல் ரசிகர்கள் எதிர்பார்க்கும் படமாக ஆர்ட்டிங்கிள் 15 வரவேண்டுமென்பதே ரசிகர்களின் விருப்பம்.

இப்படத்தை முடித்துவிட்டு, மகிழ் திருமேனி படத்தை அடுத்ததாக துவக்குகிறார் உதயநிதி என்பது குறிப்பிடத்தக்கது.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

ஞாயிறு 11 ஏப் 2021