மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

வெற்றிக்கணக்கைத் தொடங்கிய பெங்களூரு அணி!

வெற்றிக்கணக்கைத் தொடங்கிய பெங்களூரு அணி!

சென்னையில் நேற்று தொடங்கிய 14ஆவது ஐபிஎல் போட்டியில் வழக்கமாக நடக்கும் கொண்டாட்டங்கள் ஒன்றுமில்லாவிட்டாலும் முதல் ஆட்டமே வீட்டில் இருந்த போட்டியை ரசித்தவர்களுக்குக் கோலாகலமாகி விட்டது. பரபரப்பான கடைசி ஓவரில் இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணி கொண்டாட்டத்துக்கு அஸ்திவாரமிட்டுள்ளது.

14ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் நேற்று (ஏப்ரல் 9) முதல் தொடங்கியுள்ளன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரூ அணியும் மோதின. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற விராட் கோலி மும்பை அணியை பேட்டிங் செய்ய அழைத்தார்.

இதன்படி முதலில் பேட்டிங்கைத் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது. மும்பை அணியில் அதிகபட்சமாக கிறிஸ் லின் 35 பந்துகளில் 49 ரன்கள் எடுத்தார்.

பந்து வீச்சைப் பொறுத்தவரை ஹர்ஷல் படேல் நான்கு ஓவர்கள் வீசி 27 ரன்கள் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதையடுத்து, 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பெங்களூரு அணி பேட்டிங் செய்ய தொடங்கியது.

தொடக்க ஆட்டக்காரர்களாக வாஷிங்டன் சுந்தர், விராட் கோலி இறங்கினர். சுந்தர் 10 ரன்னில் அவுட்டானார். அடுத்து இறங்கிய படிதார் 8 ரன்னில் ஏமாற்றினார். தொடர்ந்து இறங்கிய அனுபவ வீரர் மேக்ஸ்வெல்லும், விராட் கோலியும் 52 ரன்கள் ஜோடி சேர்த்தனர்.

அணியின் எண்ணிக்கை 98 ஆக இருக்கும்போது விராட் கோலி 33 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த சில நிமிடங்களில் மேக்ஸ்வெல் 39 ரன்னில் வெளியேறினார். தொடர்ந்து இறங்கிய டி வில்லியர்ஸ் முதலில் நிதானமாக ஆடினார். அதன்பின் அதிரடி காட்டி அரை சதமடித்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.

இறுதியில் பெங்களூரு அணி 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 160 ரன்கள் எடுத்து, இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் நடப்பு தொடரின் முதல் வெற்றியைப் பதிவு செய்தது.

வழக்கமாக தொடரின் முதல் போட்டியைப் பெரும்பாலும் மும்பை அணி இழக்கும் என்று அந்த அணியின் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. அந்தக் கணக்கு நேற்றைய போட்டியிலும் நிகழ்ந்துள்ளது.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

சனி 10 ஏப் 2021