மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

99 வயசு இளவரசர்: அப்டேட் குமாரு

99 வயசு இளவரசர்: அப்டேட் குமாரு

இங்கிலாந்துல 99 வயசுல நிறைவாழ்வு வாழ்ந்துட்டு தாத்தா இறந்து போயிருக்காரு. ஆனா அவரை போய் இளவரசர்னு சொல்றது என்னய்யா நியாயம்னு மாஸ்க் போட்டுக்கிட்டே அண்ணன் ஒருத்தர் டீக்கடையில சிரிச்சாரு. பக்கத்துல டீ குடிச்சிக்கிட்டிருந்த இன்னொரு தம்பி, ‘அது ஒண்ணுமில்லண்ணே... 65 வயசுல கூட இளைஞரணிச் செயலாளரா இருந்தா அது மக்களாட்சி.... 99 வயசுலயும் இளவரசா இருந்தா அது மன்னராட்சினு’ விளக்கம் கொடுக்க, நான் சிரிச்ச சிரிப்புல என் மாஸ்க் கிழிஞ்சு போச்சு. 200 ரூபாய் ஃபைன் போடுறதுக்குள்ள நான் வீட்டுக்குக் கிளம்புறேன். நீங்க அப்டேட் பாருங்க.

ஜோக்கர்...

கொரோனா to கொரோனா 2.0 ~

என்னடா ஒரே நாள்ல இவ்ளோ பேர அள்ளிப்போட்டு கொண்டு வந்திருக்கே..

சரவணன். ℳ

நாடு முழுவதும் ரயில் சேவையை நிறுத்தவோ, குறைக்கவோ எந்த திட்டமும் இல்லை - ரயில்வே துறை

ஸ்ட்ரெய்ட்டா தனியாருக்கு விற்பனை தான்னு சொல்லுங்க...!

ரஹீம் கஸ்ஸாலி

ஏ.டி.எம். மில் செக்யூரிட்டி வேலை வாங்கிட்டால் போதும். குளுகுளுன்னு உட்கார்ந்திருக்கலாம்.

amudu

தனியார் மருத்துவமனையின் பில்லை பார்த்த பிறகும், ஒரு நோயாளி உயிர் பிழைத்து வருவதும், மறுபிறவி என்பதில் தான் சேரும்.

கடைநிலை ஊழியன்

மாஸ்க் போட்டுட்டு போனா உங்களுக்கு கொரோனா அடிமை !!

மாஸ்க் போடாம போனா கொரோனாவுக்கு நீங்க அடிமை !!

கோழியின் கிறுக்கல்!!

நம்ம Accountல இருந்து பணம் எடுக்கிறது உடனே எடுத்துடுவாங்களாம்,

ஆனால் ஏதாவது தவறாக விட்டால் திரும்ப பணம் வர மூணு நாள் ஆகுமாம்!?

என்னங்கடா Digital India??

ரஹீம் கஸ்ஸாலி

உலகத்திலேயே ஐ.டி. ரெய்டைக்கூட தம்பிக்கு ஒரு ஊத்தப்பம் ரேஞ்சில் டீல் செய்தது திமுகவாகத்தான் இருக்கும்.

மயக்குநன்

பொதுக் கூட்டங்களுக்கு 50 பேர் மட்டுமே அனுமதி!- தமிழக அரசு அறிவிப்பு.

அவ்ளோ பேருக்கு எங்கே போறது?- தமிழக பாஜக.

சரவணன். ℳ

என்னடா பெட்ரோல் பங்க்கில் இவ்ளோ கூட்டம் இருக்கு..

எலக்சன் முடியற நேரம் வந்துட்டா, அப்படித்தான்ணே இருக்கும்...!

கோழியின் கிறுக்கல்!!

மாநில அரசாய் நான்,

மத்திய அரசாய் நீ,

GST நிலுவைத் தொகையாய் நம் காதல்!!

-லாக் ஆப்

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

2 நிமிட வாசிப்பு

பொன்னியின் செல்வன் ‘வந்தியதேவன்’ புறப்பட்டார்!

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

3 நிமிட வாசிப்பு

மிஷ்கின் இயக்கத்தில் நடித்தது ஏன்?: விஜய்சேதுபதி

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

2 நிமிட வாசிப்பு

வெங்கட்பிரபுவுடன் ஜோடி சேர்ந்த சினேகா

சனி 10 ஏப் 2021