மின்னம்பலம் மின்னம்பலம்

சனி 10 ஏப் 2021

விஜய் 65 ஷுட்டிங்: புது அப்டேட் !

விஜய் 65 ஷுட்டிங்:  புது அப்டேட் !

படத்துக்கு படம் ரசிகர்கள் மத்தியிலும் சரி, வசூல் ரீதியாகவும் சரி மிகப்பெரிய இடத்தை பிடித்து வருகிறார் விஜய். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அதுவும், 50% திரையரங்குகள் அனுமதியில் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்தது.

தொடர்ச்சியாக இளம் இயக்குனருக்கு வாய்ப்பு கொடுக்கும் திட்டத்தில் இருக்கும் விஜய்யின் அடுத்தத் தேர்வாக இருப்பவர் நெல்சன். மாஸ்டர் தொடர்ந்து ‘விஜய் 65’ படத்தை நெல்சன் இயக்கி வருகிறார். இவர், நயன்தாரா நடித்து வெளியான கோலமாவு கோகிலா படத்தின் இயக்குனர். சிவகார்த்திகேயன் நடிக்க டாக்டர் படத்தினை முடித்திருக்கிறார். டாக்டர் ரிசல்ட்க்கு முன்பே, விஜய்யை இயக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

விஜய் 65 படத்தை சன்பிக்சர்ஸ் தயாரிக்க, அனிருத் இசையில் மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு மேற்கொள்கிறார். விஜய்க்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடிக்கிறார். வில்லன் யாரென்பதை ரகசியமாக வைத்திருக்கிறது படக்குழு. சமீபத்தில் இப்படத்தின் துவக்க விழா பூஜையுடன் துவங்கியது. எளிமையான முறையில் நடந்த விழாவுக்கு விஜய் கலந்து கொண்டது வைரலானது. இரண்டு நாட்கள் சென்னையில் படப்பிடிப்பை முடித்த படக்குழு வெளிநாடு படப்பிடிப்புக்கு சென்றுள்ளது.

தேர்தல் நாளுக்காக காத்திருந்து, வாக்களித்து விட்டு அடுத்த நாளே வெளிநாடு பறந்தது படக்குழு. தற்போது, ஜார்ஜியாவில் படப்பிடிப்பை துவங்கிவிட்டார்கள். இந்த தகவலை உறுதி செய்துள்ளது படக்குழு. விஜய் படப்பிடிப்பில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது. படப்பிடிப்பில் இருக்கும் விஜய் போட்டோ தற்பொழுது வைரலாகி வருகிறது.

-ஆதினி

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

3 நிமிட வாசிப்பு

வடிவேலு படத் தலைப்பு: சிவகார்த்திகேயன் கருத்து!

சனி 10 ஏப் 2021