மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

சென்னையில் இன்று ஐபிஎல் ஆரம்பம்!

சென்னையில் இன்று ஐபிஎல் ஆரம்பம்!

14ஆவது ஐபிஎல் சீசன் இன்று (ஏப்ரல் 9) சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு ரசிகர்கள் யாருமின்றி தொடங்க உள்ளது. மொத்தம் 60 போட்டிகள் நடைபெற உள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான மும்பை இண்டியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன.

மும்பையை ரோகித் ஷர்மாவும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை விராட் கோலியும் வழிநடத்துகின்றனர். இந்த இரு அணிகளுக்கும் இதுவரை கடந்த சீசன்களில் நடைபெற்ற 29 போட்டிகளில் 19 முறை மும்பையும், 10 முறை பெங்களூருவும் வென்றுள்ளன.

கடந்த 2020 சீசனில் நடைபெற்ற இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பதிவு செய்திருந்தன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டியில் பெங்களூரு அணியின் கேப்டன் கோலி 26 போட்டிகளில் 637 ரன்களை குவித்துள்ளார். அதே போல அதிகபட்சமாக 19 விக்கெட்டை அந்த அணியின் வீரர் சாஹல் வீழ்த்தியுள்ளார். அவருடன் மும்பை அணியின் வீரர் பும்ரா விக்கெட் வீழ்த்தியவர்களின் பட்டியலில் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

வழக்கமாக தொடரின் முதல் போட்டியைப் பெரும்பாலும் மும்பை அணி இழக்கும். அப்படிதான் அந்த அணியின் புள்ளி விவரங்கள் உள்ளன. அதனால் முதல் போட்டியில் பெங்களூரு வெல்லும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சென்னை மைதானம் சுழற்பந்து வீச்சுக்குக் கைகொடுக்கும் என்பதால் இன்றைய ஆட்டத்தை பொறுத்தவரை சுழற்பந்து வீச்சாளர்கள் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த (2020) ஆண்டு இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் உச்சத்தில் இருந்ததால் 13ஆவது ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் அங்கு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில் கொரோனா பாதிப்பு இன்னும் கட்டுக்குள் வராவிட்டாலும் ஐபிஎல் போட்டி மீண்டும் அதன் தாயகமான இந்தியாவுக்கு திரும்புகிறது.

கொரோனா எதிரொலியாக கடந்த ஆண்டு ஐபிஎல் போட்டியை நேரில் பார்க்க ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை. இந்த சீசனிலும் ரசிகர்களின் ஆரவாரத்தைப் பார்க்கும் வாய்ப்பு இல்லை. பூட்டிய மைதானத்திலேயே ஆட்டங்கள் நடக்க உள்ளன. கொரோனா தடுப்பு மருத்துவ உயிர் பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டு அதில் இணைந்துள்ள வீரர்கள் மற்றும் பயிற்சி குழுவினர், நிர்வாகிகள் எந்த காரணத்தை கொண்டும் கொரோனா விதிமுறைகளை மீறக்கூடாது என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-ராஜ்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 9 ஏப் 2021