மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

ஒரே நாளில் மோதுகிறதா ரஜினி, கமல் படங்கள்?

ஒரே நாளில் மோதுகிறதா ரஜினி, கமல் படங்கள்?

ரஜினி நடிப்பில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிவரும் படம் ‘அண்ணாத்த’. விஸ்வாசம் படத்தைத் தொடர்ந்து சிவா இயக்கத்தில் தேசிய விருது கலைஞர் இமான் இசையில், நயன்தாரா , கீர்த்தி சுரேஷ், குஷ்பு, மீனா, சூரி, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட கலைஞர்கள் நடிப்பில் உருவாகிவருகிறது. இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக இருப்பதால் வேகமாகப் படத்தின் பணிகளை முடித்துவருகிறார்கள்.

கொரோனாவுக்கு முன்பே 60% படபிடிப்பை படக்குழு முடித்திருந்தது. கடந்த, டிசம்பர் இறுதியில் படப்பிடிப்பை துவங்கியது படக்குழு. அப்போது, படக்குழுவில் சிலருக்கு கொரோனா தொற்று இருந்ததால் படப்பிடிப்பு நின்றுபோனது. அதன்பிறகு, சென்னையில் படப்பிடிப்பை மாற்றி, சமீபத்தில் சில காட்சிகள் எடுக்கப்பட்டது.

இந்நிலையில், மீண்டும் ஹைதராபாத்தில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்க இருக்கிறார்கள். அதனால், தனி விமானம் மூலமாக ஹைதராபாத் சென்றிருக்கிறார் ரஜினிகாந்த். இந்தமுறை தீவிரமானப் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்காம் படக்குழு.

இதே நேரத்தில், தேர்தல் முடிந்துவிட்டதால் கமல்ஹாசனும் நடிப்புக்கு இறங்கியிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிக்க உருவாகிவரும் படம் விக்ரம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது. கைதி, மாஸ்டர் கொடுத்த ஹிட்டினால், விக்ரம் படத்துக்கும் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது. கமலுக்கு வில்லனாக ஃபகத் ஃபாசில் நடிக்கிறார். அனிருத் படத்துக்கு இசையமைக்கிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு மே மாதம் துவங்க இருக்காம். அதோடு, இந்த தீபாவளிக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள்.

ஆக, ரஜினியின் அண்ணாத்த & கமலின் விக்ரம் படங்கள் தீபாவளிக்கு ஒரே நாளில் வெளியாக வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல். இறுதியாக, 2005ல் ரஜினியின் சந்திரமுகி & கமலின் மும்பை எக்ஸ்பிரஸ் படங்கள் தமிழ் புத்தாண்டுக்கு ஒரே நாளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

3 நிமிட வாசிப்பு

விவாகரத்து செய்யும் தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்த்

புதிய படங்களை ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

5 நிமிட வாசிப்பு

புதிய படங்களை  ஓரங்கட்டிய எம்.ஜி.ஆர்

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம் எவ்வளவு?

3 நிமிட வாசிப்பு

'ஓ சொல்றியா பாடல்': சமந்தாவின் சம்பளம்  எவ்வளவு?

வெள்ளி 9 ஏப் 2021