மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

சுல்தான் மூலம் கிடைத்த அங்கீகாரம் : சென்றாயன் உருக்கம்!

சுல்தான் மூலம் கிடைத்த அங்கீகாரம் : சென்றாயன் உருக்கம்!

திரைத்துறை கலைஞர்கள் அழகிய தோற்றம் காரணமாக ரசிகர்கள் கவனத்தை தங்கள் பக்கம் திருப்புவது வாடிக்கை. ஆனால் வித்தியாசமான தலைமுடியால் திரையில் இவர்களைப் பார்த்தவுடன் சிரிக்க வைக்கும் யோகி பாபுவும், சென்றாயனும் சமகால நடிகர்களாக இருக்கின்றார்கள்.

இவர்கள் இருவரும் நடித்துள்ள சுல்தான், கடந்த ஏப்ரல் 2 அன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக இரண்டவாது வாரம் 80% திரைகளில் படம் தொடர்கிறது. இப்படத்தின் வெற்றி செய்தியை பகிர்ந்து கொள்வதற்காக சென்னையில் படக்குழுவினர் செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.

அதில் கலந்துகொண்டு நடிகர் சென்றாயன் பேசியது, “தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தேன். நான் சிறு வியாபாரியாக இருந்த, ‘வெற்றி’ திரையரங்கில் இப்போது நான் நடித்துள்ள சுல்தான் படம் ஓடிக் கொண்டிருக்கிறது. எனது பெற்றோர் பார்த்துவிட்டு நீ நடித்த காட்சிகளுக்கு பலத்த கைத்தட்டல் ஒலிக்கிறது என்று கூறினார்கள். இதற்கு காரணம் சுல்தான் படம் என்றார். மேலும் பேசும்போது எனது ஒல்லியான உடல் அமைப்பும் சிலுப்பிக்கொண்டு நிற்கும் தலைமுடியும் மற்றவர்களிடம் இருந்து என்னை வித்தியாசப்படுத்திக் காட்டும்.

இதனாலேயே திரைத்துறையில் நடிகனாகும் ஆசையை எனக்குள் ஏற்படுத்தியது பிழைப்புக்காக போடியில் இருக்கும் திரையரங்கில் தின்பண்டம் வியாபாரம் செய்தேன். சினிமாவில் நடிக்க சென்னைக்கு வந்தேன். அவ்வளவு எளிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை . எனது வித்தியாசமான குரல், தலைமுடிக்காக வாய்ப்பு கிடைத்தது. பொல்லாதவன், ஆடுகளம் படங்களில் நடித்தாலும் மூடர்கூடம் படம் எனக்கு தனித்த அடையாளத்தைத் தமிழ் சினிமாவில் பெற்று தந்தது. பிக்பாஸ் என்னை உலகம் முழுவதும் கொண்டு சேர்த்தது. இருந்தபோதும் காமெடியன், குணசித்ரம், வில்லன் எனப் பல வேடங்களில் நடித்திருந்தாலும் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைக்கவில்லை.

திரையரங்கில் கைத்தட்டல் வாங்கி நீண்ட நாள் ஆகின்றது என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். அது ‘சுல்தான்’ படத்தில் நடந்தது. இப்படத்தின் படப்பிடிப்பில் இயக்குநரிடம் எனக்கு இப்படத்தில் ஏதாவது பஞ்ச் வசனம் கொடுங்கள் என்று கேட்டேன். உனக்கு இப்படத்தில் காது கேட்காது, அதை வைத்து ஒரு பஞ்ச் இருக்கிறது என்று கூறினார்.

நடிகர் கார்த்தி சாரும் ஆமாம், இருக்கிறது பொறுங்கள் என்றார். அதேபோல, நான் நடித்த அந்த காட்சியில் திரையரங்கில் பலத்த கைத்தட்டல்கள் கிடைத்து வருகிறது. அதுதான் என்னைப் போன்ற சாமான்ய கலைஞனுக்கான மிகப்பெரும் அங்கீகாரம்” என்றார் சென்றாயன்.

-இராமானுஜம்

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

6 நிமிட வாசிப்பு

பிக்பாஸ் அக்‌ஷரா ரெட்டியின் மறுமுகம்!

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

3 நிமிட வாசிப்பு

நடிகர்களை பின்னுக்கு தள்ளிய ராஷ்மிகா மந்தனா

வாகா எல்லையில் நடிகர் அஜித்

2 நிமிட வாசிப்பு

வாகா எல்லையில் நடிகர் அஜித்

வெள்ளி 9 ஏப் 2021