மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

கவசகுண்டலத்துடன் கர்ணன் முடிசூடிய சுல்தான்

கவசகுண்டலத்துடன் கர்ணன் முடிசூடிய சுல்தான்

உலகம் முழுவதும் உள்ள தமிழ் சினிமா ரசிகர்களிடம் உச்சகட்ட எதிர்பார்ப்பை இந்த வருடம் ஏற்படுத்தியிருக்கும் படம் கலைப்புலி தாணு தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கும் கர்ணன் திரைப்படம்.

இது போன்ற எதிர்பார்ப்பை விஜய் நடித்து ஜனவரியில் வெளியான மாஸ்டர், கார்த்தி நடிப்பில் கடந்த வாரம் வெளியான சுல்தான் படங்கள் ரசிகர்களிடமும், திரையரங்க உரிமையாளர்களிடமும் ஏற்படுத்தியது. படைப்புரீதியாக இல்லாமல் திரைக்கு வருமா அல்லது ஓடிடியிலா என்று.

அதில் இருந்து முற்றிலும் மாறுபட்ட எதிர்பார்ப்பை படத்தின் பெயர் கர்ணன் என்று அறிவிக்கப்பட்ட நாள் முதல் ஆடியோ வெளியீடு வரை ஏதேனும் ஒரு சர்ச்சையை எதிர்கொண்டு அதனை அந்தப் படத்திற்கான இலவச விளம்பரமாக மாற்றிக்கொண்டு இன்றைக்கு உலகம் முழுவதும் திரைக்கு வந்திருக்கிறது கர்ணன்.

இன்றைக்கு தமிழகத்தில் 100% பார்வையாளர்களுடன் தன் பயணத்தை தொடங்குகிற கர்ணன் நாளை முதல் கொரோனா கட்டுப்பாடு காரணமாக 50% பார்வையாளர்கள் மட்டுமே கர்ணன் படத்தை பார்க்க முடியும் என்கிற சூழலை எதிர்கொள்கிறது. ஏப்ரல் 2 அன்று 485 சென்டர்களில் சுமார் 600 திரைகளில் வெளியிடப்பட்ட சுல்தான் 30 கோடி ரூபாய் மொத்த வசூல் செய்திருக்கிறது

இன்றைக்கு சுமார் 550 திரைகளில் கர்ணன் திரையிடப்படுவதால் சுல்தான் 400 திரைகளில் மட்டும் இரண்டாவது வாரமாக தொடர்கிறது. கர்ணன் அதன் புரமோஷன் மூலம் தனுஷ் ரசிகர்களை மட்டுமல்ல சினிமா பார்க்கும்வழக்கம் இல்லாதவர்களைகூட தன்பக்கம் ஈர்த்திருக்கிறது மாஸ்டர், சுல்தான் படங்களைத் தொடர்ந்து திரையரங்குகளில் ரசிகர்கள் கூட்டம் குவிந்திருக்கிறார்கள் என்கிறது திரையரங்க வட்டாரம். அதன் அடையாளம்தான் சென்னை ரோகிணி திரையரங்கில் தனுஷ் ரசிகர்கள் வைத்திருக்கும் 60 அடி உயர கட் அவுட் என்கிறார்கள்.

இன்றைய களநிலவரம், திரைகளின் எண்ணிக்கை அடிப்படையில் சாதாரண கட்டணத்தில் தமிழக திரையரங்குகளில் முதல்நாள் மொத்த வசூல் 12 கோடி ரூபாய் அளவில் இருக்கும் என்கிறது சினிமா வியாபார வட்டார தகவல்.

-இராமானுஜம்

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

4 நிமிட வாசிப்பு

ரஜினி பாடல் காட்சிகள் அதிகம் விரும்பப்படவில்லையா?

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

3 நிமிட வாசிப்பு

மானநஷ்ட வழக்கு தொடுத்த நடிகை சமந்தா

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

10 நிமிட வாசிப்பு

‘எனிமி’க்கு எனிமியான அண்ணாத்த

வெள்ளி 9 ஏப் 2021