மின்னம்பலம் மின்னம்பலம்

வெள்ளி 9 ஏப் 2021

விரைவில் இன்று நேற்று நாளை 2... தாமதத்துக்கு காரணம்!

விரைவில் இன்று நேற்று நாளை 2... தாமதத்துக்கு காரணம்!

ஒரு படம் வெளியாகி பெரிய ஹிட் கொடுத்துவிட்டால், அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் வந்துவிடும் டிரெண்டு தற்போது உருவாகியிருக்கிறது. சந்திரமுகி 2, விடிவி 2, சூதுகவ்வும் 2 உள்ளிட்ட படங்கள் உருவாக இருக்கும் இந்த நிலையில், டைம் டிராவல் படமாக வெளியான இன்று நேற்று நாளை படத்தின் இரண்டாம் பாகமும் விரைவில் தொடங்குகிறது.

2015இல் ரவிக்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால், மியா, கருணாகரன் நடிப்பில் ஹிப் ஹாப் ஆதி இசையில் வெளியான டைம் டிராவல் படம் ‘இன்று நேற்று நாளை’. புதிய முயற்சியாக உருவாகி பெரியளவில் வெற்றியும் பெற்றது. இந்த நிலையில், இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த பேச்சுவார்த்தை நீண்ட நாட்களாக இருந்துவந்தது. தொடர்ந்து, இந்த வருடத் தொடக்கத்தில் இரண்டாம் பாகமானது பட பூஜையுடன் தொடங்கியது. ஆனால், எப்போது படப்பிடிப்பு தொடங்கும் என்பது குறித்த தகவல் இல்லாமல் இருந்து வந்தது. இந்த நிலையில், வருகிற மே மாதத்தின் முதல் வாரத்தில் தொடங்க இருக்கிறது.

படத்தின் பூஜையெல்லாம் முன்கூட்டியே முடிந்துவிட்ட நிலையில், படம் தொடங்க நீண்ட காலம் எடுத்துக்கொண்டதற்கு காரணம் இருக்கிறது. நடிகர் விஷ்ணு விஷால் எஃப்.ஐ.ஆர் படத்திலும், மோகன்தாஸ் படத்திலும் பிஸியாக இருந்துவிட்டார். அதுபோல, சிவகார்த்திகேயன் நடிக்க அயலான் படப் பணிகளில் ரவிக்குமார் இருந்துவிட்டார். இந்த நிலையில், இரண்டு பேருமே தங்களுக்கான படங்களை விரைவில் முடிப்பதால், ‘இன்று நேற்று நாளை 2’ விரைவில் தொடங்குகிறது.

இந்தப் படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதுகிறார் இயக்குநர் ரவிக்குமார். இன்று நேற்று நாளை படத்தில் இணை இயக்குநராகப் பணியாற்றிய எஸ்.பி.கார்த்திக் இயக்கவுள்ளார். முந்தைய பாகத்தில் நடித்த விஷ்ணு விஷால், மியா ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்டோர் இந்தப் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர்.

முதல் பாகத்தில் ஹிப் ஹாப் ஆதி இசையமைத்திருந்தார். தற்போது இரண்டாம் பாகத்துக்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வெள்ளி 9 ஏப் 2021