மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி இதுவா ?

அஜித்தின் வலிமை ரிலீஸ் தேதி இதுவா ?

அஜித் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் தயாராகிவரும் படம் வலிமை. நேர்கொண்டப் பார்வை படத்தைத் தொடர்ந்து ஹெச்.வினோத் & போனிகபூர் மற்றும் அஜித் கூட்டணியில் உருவாகிவரும் இரண்டாவது படமே வலிமை.

சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று மாதிரியான வெற்றிப் படங்களைக் கொடுத்தவர் ஹெச்.வினோத் என்பதால் படம் எப்படி இருக்கப் போகிறது என்பதை பார்க்க ரசிகர்கள் வெறித்தன வெயிட்டிங். கூடுதலாக அஜித்தின் 60 -வது படம்.

வலிமை படத்தில் போலீஸ் அதிகாரியாக அஜித் நடித்திருக்கிறார். முழுக்க முழுக்க ஆக்‌ஷன் கலந்த செண்டிமெண்ட் சினிமாவாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

வலிமை படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் என்னவென்றால், இறுதிக் கட்டப் படப்பிடிப்பை வட இந்திய பகுதிகளான குஜராத், ராஜஸ்தான், புனே உள்ளிட்ட சில நகரங்கள் நடத்தி முடித்து விட்டது. அடுத்தக் கட்டமாக, சண்டைக் காட்சிகளை எடுப்பதற்காக வெளிநாடு செல்ல தயாராகி வருகிறது. 10 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே மீதம் இருக்கிறது.

படப்பிடிப்பு முடிந்த வரைக்குமான காட்சிகளுக்கு படத்தொகுப்பு மற்றும் இசைக் கோர்ப்பு பணிகள் முடிந்துவிட்டதாம். மே 1ஆம் தேதி படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், படத்தை ஆகஸ்ட் 12ஆம் தேதி வெளியிட பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அஜித்துக்கு விருப்பமான வியாழக்கிழமை நாளில் வலிமை வெளியாக இருப்பதாக சொல்கிறார்கள். இன்னும், இந்த முடிவு உறுதி செய்யப்படவில்லை என்றும் ஒரு தகவல்.

- தீரன்

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

3 நிமிட வாசிப்பு

பேரு வச்சாலும் பாடல்... ரகசியத்தைப் பகிர்ந்த இளையராஜா

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

2 நிமிட வாசிப்பு

படக்குழுவினரைக் கண்கலங்க வைத்த கீர்த்தி சுரேஷ்

உதயநிதி படத்தில் வடிவேலு?

3 நிமிட வாசிப்பு

உதயநிதி படத்தில் வடிவேலு?

வியாழன் 8 ஏப் 2021