மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி!

இயக்குனர் எஸ்.பி.முத்துராமன் மருத்துவமனையில் அனுமதி!

புகழ்பெற்ற மூத்த இயக்குநர் எஸ்.பி முத்துராமன் கொரோனா அறிகுறிகளுடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ரஜினிகாந்தின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தவர் இயக்குனர் எஸ்.பி.முத்துராமன். ரஜினியின் தர்மத்தின் தலைவன், குரு சிஷ்யன், வேலைக்காரன், பாயும் புலி போன்ற ஹிட் படங்களைக் கொடுத்தது முத்துராமன் தான்.

அதே போன்று கமல்ஹாசனின் பேர் சொல்லும் பிள்ளை, ஜப்பானில் கல்யாணராமன், உயர்ந்த உள்ளம் ஆகிய படங்களையும் இயக்கியுள்ளார். இறுதியாக 1992 ஆம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த பாண்டியன் என்ற திரைப்படத்தை இயக்கினார். அதன்பின்னர் வயது மூப்பு காரணமாக ஓய்வில் உள்ளார். தற்போது உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அனுமதிக்கப்பட்டிருக்கும் தனியார் மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், `` புகழ்பெற்ற எஸ் பி முத்துராமன் கொரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு அதற்கான பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளார். அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

-ஆதினி

விருதுகளை அள்ளிய அசுரன்!

2 நிமிட வாசிப்பு

விருதுகளை அள்ளிய அசுரன்!

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

4 நிமிட வாசிப்பு

கார்த்தி முடிவால் வட்டியில் சிக்கிய தயாரிப்பாளர்!

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

6 நிமிட வாசிப்பு

ஐபிஎல்: மும்பையை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ்!

வியாழன் 8 ஏப் 2021