மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

ஒட்டு போடாத சினிமா பிரபலங்கள்: என்ன காரணம் ?

ஒட்டு போடாத சினிமா பிரபலங்கள்: என்ன காரணம் ?

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு தமிழகத்தின் தலையெழுத்தை எழுதப் போகும் அரசியல்கட்சி எது என்பது இன்னும் 23 நாட்களில் தெரிந்துவிடும். அதற்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 06-ஆம் தேதி நடந்தது. வாக்களிப்பது மக்களின் ஜனநாயக கடமை. அரசியல் தலைவர்களில் துவங்கி சினிமா பிரபலங்கள் வரை பலரும் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றினர். அஜித், ரஜினி, கமல், விஜய், சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் வாக்களித்தனர். குறிப்பாக விஜய்யின் சைக்கிள் பயணம், அஜித்தின் மாஸ்க் உள்ளிட்டவை செம டிரெண்டானது. இந்நிலையில் சில தவிர்க்க முடியாத காரணங்களால் முக்கிய சினிமா பிரபலங்கள் சிலர் ஓட்டுப்போட வரவில்லை. ஜனநாயகக் கடமையை மிஸ் செய்த சினிமா பிரபலங்கள் யார்? என்ன காரணம்? பார்த்துவிடலாம்.

அனைவரும் கட்டாயம் ஒட்டுப் போட வரவேண்டும் என்று தொடர்ச்சியாக பேசிக்கொண்டு இருந்த நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன். ஓட்டுப் போட ஆவலாக இருந்தவருக்கு கொரோனா செக் வைத்தது. சில தினங்களுக்கு முன்பு போட்ட கொரோனா தடுப்பூசி அவருக்கு அலர்ஜியை ஏற்படுத்தியுள்ளது. அதனால், மருத்துவ ஆலோசனையால் ஓட்டுப்போட வரவில்லை.

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை செம பிஸியாக இருக்கும் நடிகர் தனுஷ். நெட்ஃப்ளிக்ஸ் நிறுவன தயாரிப்பில் ரூஸோ சகோதரர்கள் இயக்கத்தில் க்ரே மேன் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிப்புக்காக அமெரிக்காவில் இருப்பதால் அவரால் வர முடியவில்லை.

கடந்த காலங்களில் இடைத்தேர்தலில் போட்டி போட விரும்பிய நடிகர் விஷால், இந்த முறை ஓட்டுப் போடவில்லை. சமீபத்தில் எனிமி படத்தின் படப்பிடிப்பை துபாயில் முடித்து சென்னை திருப்பியதால் குவரண்டைனில் இருக்கிறார். அதனால், அவர் வரவில்லை.

எந்த பொது நிகழ்ச்சிகளுக்கும் வராமல் தவிர்க்கும் நயன்தாரா வழக்கம் போல ஓட்டுப்பதிவையும் தவிர்த்து விட்டார் போல. இயக்குநர் விக்னேஷ் சிவனும் ஒட்டு போடவில்லை. அதோடு, தேசிய விருது இயக்குனர் வெற்றிமாறன் சில முக்கிய காரணத்தால் வரவில்லை என்கிறார்கள்.

பொன்னியின் செல்வன் படத்தின் பணியில் இருக்கும் மணிரத்னம் ஒட்டு போடவில்லை. அதுபோல ‘99 சாங்ஸ்’ படத்தின் புரோமோஷனில் இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானும் ஓட்டுப் போடவில்லை.

- ஆதினி

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

3 நிமிட வாசிப்பு

‘ஜென்டில்மேன் 2’ இசையமைப்பாளர் அறிவிப்பு!

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

3 நிமிட வாசிப்பு

நிறத்தால் ஏற்பட்ட அவமானம் : மனம் திறந்த வினுஷா

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

3 நிமிட வாசிப்பு

அடுத்தடுத்து 2 பாலிவுட் படங்களில் தனுஷ்

வியாழன் 8 ஏப் 2021