மின்னம்பலம் மின்னம்பலம்

வியாழன் 8 ஏப் 2021

ஹீரோ சதீஷ், நாயகி பவித்ரா, தயாரிப்பு ஏஜிஎஸ்... இயக்குநர் இவரா!

ஹீரோ சதீஷ், நாயகி பவித்ரா, தயாரிப்பு ஏஜிஎஸ்... இயக்குநர் இவரா!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர்கள் ஹீரோக்களாக மாறுவது இயல்பாக நடக்கும். ஒன்றிரண்டு படங்கள் ஹீரோவாகிவிட்டு, மீண்டும் காமெடி டிராக்குக்குச் சென்றுவிடுவார்கள். சமீபத்தில் காமெடியன் கம் ஹீரோவாக யோகி பாபு, சூரி, சந்தானம் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துவருகின்றனர். இந்த வரிசையில் நடிகர் சதீஷ் இணைந்துள்ளார்.

விஜய் நடித்து வெளியான பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க ஹீரோவாக சதீஷ், நாயகியாக குக் வித் கோமாளி பவித்ரா நடிக்க உருவாகும் படமானது பூஜையுடன் நேற்று தொடங்கியது. இந்தப் படத்தை கிஷோர் குமார் இயக்கவுள்ளார். இவர், யூடியூப் சேனல்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர். இந்தப் படத்தின் மூலம் இயக்குநராகியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளராக ப்ரவீன், இசையமைப்பாளராக அஜீஷ் அசோக் ஒப்பந்தமாகியிருக்கிறார்கள். முழுக்க முழுக்க சென்னைக்குள்ளேயே குறைந்த பட்ஜெட்டில் உருவாகும் விதமாக படம் தயாராக இருக்கிறதாம். இந்தப் படத்தின் பூஜைக்கு நடிகர் சதீஷின் நெருங்கிய நண்பரான சிவகார்த்திகேயன் வந்திருந்தார்.

ஆர்யாவின் மதராசபட்டினம் படத்தின் மூலம் காமெடியனாக கவனம் ஈர்த்தவர் சதீஷ். அதன் பிறகு, சிவகார்த்திகேயனுடன் மான் கராத்தே, எதிர்நீச்சல், ரெமோ, வேலைக்காரன், மிஸ்டர் லோக்கல் படங்களின் மூலம் உச்சம் தொட்டார். நடிகர் விஜய்யுடன் கத்தி படத்தில் நடித்தார் என்பதும் நினைவுக்கூரத்தக்கது.

பிகில் படம் கொடுத்த ஹிட்டுக்குப் பிறகு, மீண்டும் விஜய்க்குப் படம் தயாரிக்க காத்துக் கொண்டிருக்கிறது ஏஜிஎஸ். விஜய்யின் சம்மதம் இன்னும் கிடைக்காத சூழலில் குறைவான நேரத்தில் சின்ன பட்ஜெட்டில் ஒரு படத்தை எடுத்துவிட திட்டமிட்டு, சதீஷ் படத்தை தொடங்குகிறார்கள். அதோடு, யூடியூப் சேனலில் நடிகராகப் பார்த்த ஒருவரை இயக்குநராக்கி சர்ப்ரைஸும் கொடுத்திருக்கிறது. குக்வித் கோமாளி மூலம் பிரபலமான பவித்ரா இந்தப் படத்தில் நாயகியாகியிருப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு நிலவுகிறது.

- ஆதினி

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

3 நிமிட வாசிப்பு

ஜெய்பீம்: ஆஸ்காரைத் தொடர்ந்து அடுத்த அங்கீகாரம்!

வியாழன் 8 ஏப் 2021