மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

ஓடிடியில் விஜய்சேதுபதியின் அரசியல் படம் ?

ஓடிடியில் விஜய்சேதுபதியின் அரசியல் படம் ?

மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளரான லலித்குமார் தயாரிப்பில் விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘துக்ளக் தர்பார்’. இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த புதிய தகவலொன்று கசிந்துள்ளது.

அறிமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கியிருக்கும் அரசியல் சார்ந்த கதைக்களத்துடன் உருவாகி வரும் படம் ‘துக்ளக் தர்பார்’. விஜய்சேதுபதியுடன் முதன்மை கதாபாத்திரத்தில் பார்த்திபன் நடித்திருக்கிறார்.

தேர்தலுக்கு முன்பே படத்தை வெளியிட்டுவிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் முடியாததால் அது கைகூடவில்லை. இந்நிலையில், தேர்தல் பரபரப்புக்கு மத்தியில் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியிட்டுவிடலாம் என்று திட்டமிட்டார்கள். அதுவும் நடக்கவில்லை. அதற்கும் காரணம் இருக்கிறது.

மறைந்த இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் ஸ்ருதிஹாசன், விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் படம் லாபம். இந்தப் படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருக்கும் போதுதான், எதிர்பாராத பேரிழப்பாக எஸ்.பி.ஜனநாதனின் மறைவு ஏற்பட்டது. கேப்டன் இல்லாத கப்பலாக திசைமாறிவிடக்கூடாது என்பதால், இந்தப் படத்தை உடனடியாக வெளியிட படக்குழு திட்டமிட்டது. அதன்படி, ஏப்ரலில் படத்தை ரிலீஸ் செய்வதாகவும் அறிவித்தது. அதன்பிறகு, தயாரிப்பாளர் லலித்குமாரிடம் தனிப்பட்ட முறையில் பேசி, துக்ளக் தர்பார் வெளியாக இருந்த ஏப்ரல் 30ஆம் தேதியை லாபம் படத்திற்குப் பெற்றுக் கொடுத்தார் விஜய்சேதுபதி.

இப்படியான சூழலில், துக்ளர் தர்பார் படமானது நேரடியாக ஓடிடியில் வெளியாக இருப்பதாக புதிய தகவல் பரவியது. பெரும் விலைக்கு ஓடிடி தளத்தில் விலை பேசியிருப்பதாகவும். திரையரங்கில் வெளியாகி அப்படம் கொடுக்கும் கலெக்‌ஷனை விட, ஓடிடி நிறுவனம் சொல்லும் விலை அதிகமென்பதால் சம்மதம் தெரிவித்துவிட்டார் லலித்குமார் என்றும் சொல்லப்பட்டது..

இதுகுறித்து தயாரிப்புத் தரப்பில் விசாரித்தால், அப்படியெல்லாம் எதுவுமில்லை என்று சொல்கிறார்கள். துக்ளக் தர்பார் ஓடிடிக்கு செல்வது அதிகாரப்பூர்வமாக கையெழுத்தாகவில்லை என்பதால் வெளியில் சொல்ல தயக்கம் காட்டுகிறது தயாரிப்பு தரப்பு என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா & சமந்தாவுடன் விஜய்சேதுபதியின் ரொமாண்டிக் படமாக ‘காத்துவாக்குல ரெண்டுகாதல்’ படமும், அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்துவரும் ‘கோப்ரா’ படமும், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம், துருவ் விக்ரம் நடிப்பில் ‘சியான் 60’ படங்களைத் தயாரித்து வருகிறார் லலித்குமார் என்பது குறிப்பிடத்தக்கது.

- தீரன்

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

3 நிமிட வாசிப்பு

இந்தியன் 2: கமல், ஷங்கர் எடுத்த முடிவு!

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

4 நிமிட வாசிப்பு

1930-40களின் பின்னணியில் உருவாகும் தனுஷ் படம்!

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

4 நிமிட வாசிப்பு

விக்ரம் படத்தை பாராட்டி தள்ளிய மகேஷ்பாபு

புதன் 7 ஏப் 2021