மின்னம்பலம் மின்னம்பலம்

புதன் 7 ஏப் 2021

கல்லா கட்ட தொடங்கிய கர்ணன்

கல்லா கட்ட தொடங்கிய கர்ணன்

பரியேறும் பெருமாள் 2018ஆம் ஆண்டு வெளியானபோது எந்த வித பரபரப்பும், எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளியானது. தென்மாவட்டங்களில் சாதிய ஆதிக்கம் இருந்த பகுதிகளிலிருந்த தியேட்டர் உரிமையாளர்களிடம்’ படத்தை வெளியிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்ட சம்பவங்களும் நடைபெற்றது. படம் வெளியான சில தினங்களில் படம் பற்றிய பார்வை மாறியதுடன் திரையரங்குகள் அதிகரிக்கப்பட்டது.

பரியேறும் பெருமாள் படத்தை இயக்கிய இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் இரண்டாவது திரைப்படம் ‘கர்ணன்’.இந்தப் படத்தில் நடிகர் தனுஷ் நடித்திருக்கிறார். இந்தப் படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

கலைப்புலிதாணு தயாரித்திருக்கும் கர்ணன் படம் முந்தைய தனுஷ் நடித்த படங்களைக் காட்டிலும் அதிக விலைக்கு அவுட்ரேட் அடிப்படையில் வியாபாரம் செய்யப்பட்டுள்ளது. தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்திற்காக அவருக்குத் தேசிய விருது கிடைத்துள்ள சூழலில் அதே ‘அசுரன்’ படத்திற்குத் தமிழில் சிறந்த படத்திற்கான தேசிய விருதும் கிடைத்துள்ளது என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் பத்தாண்டுகளுக்கு முன்பாக தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்திய மதுரை மாவட்டத்தில் உள்ள மேலவளவு பஞ்சாயத்து யூனியன் தலைவர் முருகேசனின் கொலைச் சம்பவம்தான் இந்தப் படத்தின் மையக் கரு என்பதால் அரசியல், சினிமா ரசிகர்கள் மத்தியில் கர்ணன் படம் கவனம் பெற்றுள்ளது. அதோடு இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டு அவையும் சர்ச்சைகளை எதிர்கொண்டு மிகப் பெரிய வெற்றியையும் பெற்றன.

இந்தப் படம் வரும் 9ஆம் தேதி வெளியாவதையொட்டி.. நேற்று மாலை 7.10 மணிக்கு முதல் இந்தப் படத்தின் முன் பதிவு தமிழகமெங்கும் தொடங்கியது. எதிர்பார்த்ததைக் காட்டிலும் முன்பதிவில் கர்ணன் கல்லாவை நிரப்பி வருவதாகத் திரையரங்க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

‘மாஸ்டர்’, சுல்தான் படங்களுக்கு அடுத்ததாகத் திரையரங்குகள் அதிகம் எதிர்பார்த்திருந்த, கர்ணன் படத்தின் முன்பதிவு முன்னேற்றம் திரையரங்க உரிமையாளர்களை மகிழ்வித்திருக்கிறது.

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

3 நிமிட வாசிப்பு

நாகசைதன்யா குடும்ப நிகழ்வில் கலந்துகொள்ளாத சமந்தா

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

4 நிமிட வாசிப்பு

எஸ்பிபியின் மனதில் இளையராஜா

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

5 நிமிட வாசிப்பு

ராய் லட்சுமியிடம் ரோபோ சங்கர் நடந்து கொண்ட விதம்!

புதன் 7 ஏப் 2021